கஞ்சிதண்ணீர்
கஞ்சிதண்ணீர்
சொல் பொருள்
கஞ்சி – நீராளமாகக் காய்ச்சப் பெற்ற பொறுக்கும் நீரும். தண்ணீர் – சோற்றில் விட்டு வைத்துக் காடியான நீர்.
விளக்கம்
கஞ்சி, அன்னப்பால் எனப்படும். “அன்னப்பால் காணாத ஏழைகட்கு நல்ல ஆவின்பால் எங்கே கிடைக்குமம்மா?” என்பது வறுமையர் வினா? கஞ்சிப்பசை, கஞ்சிக் கலயம், கஞ்சித்தொட்டி என்பவை எவரும் அறிந்தவை. ‘கஞ்சியை அன்னசாரக் கஞ்சி’ என்றும் மருத்துவர் சுட்டுவர்.
தண்ணீர் என்பது சோற்றுத் தண்ணீர் ; நீற்றுத் தண்ணீர் என்பதும் அது. புளிப்புமிக்கதாகலின் அது ‘காடி’ எனவும் படும். “காடிக் கஞ்சியானாலும் மூடிக் குடி” என்பது பழமொழி. “கஞ்சி தண்ணிக்கு வழியில்லை” என்பது வறுமை ஒலி.