,

கடுகுநெய்யும் கடுகும்
கடுகு

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கடுகுநெய், .

பொருள்

தொகு
  1. கடுகின் எண்ணெய்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. oil of mustard seed

விளக்கம்

தொகு
  • கடுகு + நெய் = கடுகுநெய்...கடுகிலிருந்து பிழிந்து எடுக்கப்படும் எண்ணெய் கடுகுநெய்...மஞ்சள் நிறமாகவும், நெடியுடன் கூடியதாகவும் இருக்கும்...சமையலிலும் நாட்டு மருத்துவத்திலும் பயனாகிறது...செக்கில் ஆட்டியபடியே இருக்கும் நிலையில் இந்த எண்ணெய் உடம்பில் பட்டால் எரிச்சல் மிகுந்து கொப்பளித்துப் புண் ஆகும்...சமையலுக்குப் பயன்படும் கடுகெண்ணெய் பலமுறை சுத்திகரிக்கப்பட்டு, இன்னொரு சமையல் எண்ணெயோடு நன்கு கலக்கப்பட்டதாகும்...வடக்கு, கிழக்கு இந்தியா, வங்க தேசம், நேபாளம் மற்றும் பாகிஸ்தானில் உணவுகள் தயாரிக்க, முக்கியமாக காய்கறிப் பதார்த்தங்களில் தாளிதம் செய்ய இந்தச் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்துகின்றனர்...குளிர்ப் பிரதேசங்களில் உடலில் சூடு உண்டாக்க, உடம்பில் தேய்த்துக் குளிக்கவும் பயன்படுத்துகின்றனர்...கடுகு எண்ணெயில் பொறித்த மீன் உணவுகள் வங்க மக்களுக்கு கொள்ளைப் பிரியம்...எனினும் அதிகமாக இந்த எண்ணெயை உட்கொள்வோருக்கு வமனம், அடிவயிற்றில் விரணம் உண்டாகும்...

மருத்துவ குணங்கள்

தொகு
  • சூட்டுத் தன்மையுள்ள கடுகுநெய்யால் (கடுகெண்ணெய்) குன்மம், இரத்தப் பித்தம், குஷ்டம், மகாவாதம், க்ஷயம், முளைமூல விரணம், குத்தல் முதலியப் பிணிகள் போகும்...

பயன்படுத்தும் முறை

தொகு
  • சாதாரணமாக ஓர் எடை கடுகுநெய்யிற்கு பத்து எடை சிற்றாமணக்கெண்ணெய் கூட்டிச் சிறிது கற்பூரமும் சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டு சிறுவர்களுக்குக் காணும் மார்புநோய், கீல்களில் வரும் ஆகியவைகளுக்கு விரலால் தொட்டு இலேசாகத் தடவி வைக்க குணமாகும்...
  • ஓர் எடை கடுகு நெய்யுடன் ஐந்து எடை சிற்றாமணக்கெண்ணெய், சிறிது கற்பூரம் கூட்டி பெரியவர்களுக்கு மேற்கண்டபடி பயன்படுத்தினால் அதேப் பிணிகளுக்கு அதிக நன்மையைத் தரும்...



( மொழிகள் )

சான்றுகள் ---கடுகுநெய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடுகுநெய்&oldid=1885502" இலிருந்து மீள்விக்கப்பட்டது