கட்டுப்படி
தமிழ் தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கட்டுப்படி, பெயர்ச்சொல்.
பொருள் தொகு
- செலவிடும் சக்தி
- இழப்பில்லாமல் சிறிது இலாபகரமாக அமைவது
மொழிபெயர்ப்பு தொகு
- ஆங்கிலம்
- affordability to spend.
- being worth while
- just sufficient
விளக்கம் தொகு
- ஒருவரின் செலவிடும் சக்தியைக் குறிப்பிடும் சொல் இது...ஆகும் அல்லது ஆகாது என்ற சொல்லுடன் சேர்த்தே உபயோகத்தில் உள்ளது...ஒருவருடைய வருவாய்க்குள் கட்டுப்படும் செலவினம் என்று பொருள்...
- கொள்முதல் விலைக்குமேல் சற்றே இலாபத்திற்கு பொருட்களை விற்பது, கட்டுப்படி ஆகும் நிலையாகும்
பயன்பாடு தொகு
- இராமன் அந்தச் சிறப்பங்காடியில் கண்டதை நிறைய வாங்கிவிட்டான் என்று நீ ஏன் சொல்லுகிறாய்?..அவனுக்கு அது கட்டுப்படி ஆகும்...வாங்கினான்...உனக்கென்ன?
- எனக்கு இவ்வளவுச் செலவு செய்யக் கட்டுப்படி ஆகாது.
- அவனுக்கு சாத்துக்குடிப் பழங்களை ஒன்று ஐந்து உரூபாய்க்கு விற்றால்தான் அவன் கொள்முதல் செய்த விலைக்குக் கட்டுப்படி ஆகும்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---கட்டுப்படி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி