கத்தரிக்காய்
ஒலிப்பு
(கோப்பு) |
- Solanum Melongena..(தாவரவியல் பெயர்)
- காயைப் பற்றிய விடயங்கள்.
பொருள்
கத்தரிக்காய்(பெ)
- உருண்டை (அ) நீளுருண்டை வடிவிலான ஆசியவைச் சேர்ந்த ஒருவகை காய்கறி வகை ஆகும்.
கத்தரிக்காய் நிறம்
தொகு- வெள்ளை.
- பச்சை.
- ஊதா.
மொழிபெயர்ப்புகள்
குறிப்பு
தொகு- இப்படித்தான் சமைக்கவேண்டும் என்றில்லாமல் எந்த விதத்திலும் நினைத்ததைப்போல் சமைக்கப்படக்கூடிய காய் ஆதலால் இதை 'காய்கறிகளின் அரசன்' என்பர்... உலகில் நிலவும் எல்லாவித சமையல் பக்குவத்திலும் அந்தந்த சமையல் முறைக்கு தகுந்தபடி சமைக்கப்படக்கூடிய காய்... இந்த காயின் வகைகளும் ஏராளம்...இதற்குள்ள உலகளாவிய வரவேற்பின் காரணமாகவே மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயும் உபயோகத்தில் வந்துவிட்டது.
- கத்தரிக்காய் பித்ததால் உண்டான கபத்தை நீக்கும்...தோல் நோய்களான புடை, கிரந்தியை அதிகரிக்கும்...அடிக்கடி உண்டால் கரப்பான் நோயை உண்டுபண்ணும்...இரத்தம் கெட்டு உடலில் நமைச்சல் உள்ளவர்கள் இந்தக் காயைச் சாப்பிடவேக் கூடாது...