கயிற்றுப்பொருத்தம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கயிற்றுப்பொருத்தம், பெயர்ச்சொல்.
- (கயிற்று+பொருத்தம்)
- திருமணப் பொருத்தங்களுள் ஒன்றான இரச்சுப் (ரஜ்ஜு)பொருத்தம்
விளக்கம்
தொகு- கயிறு என்பது தாலிக்கயிற்றைக் குறிக்கும்...இந்தப் பொருத்தத்தை நட்சத்திரப் பொருத்தம் என்றும் சொல்வர்...மணப்பெண்ணின் தாலி பாக்கியத்தைக் கணிக்கும் மிக முக்கியமான ஒரு செயல் கயிற்றுப்பொருத்தம் பார்ப்பது...இந்து முறைப்படி இருபத்து ஏழு நட்சத்திரங்களும் ஐந்து குழுக்களாக அதாவது ஐந்து இரச்சுகளாகப் பிரிக்கப்படுகிறது...ஒவ்வொரு இரச்சுவும் மனித உடலின் ஐந்துப் பகுதிகளைக் குறிக்கும்...சாதகக் கணிப்பு முறைப்படி மணப்பெண் மற்றும் மணப்பையனின் பிறப்பு நட்சத்திரங்கள் ஒரே இரச்சுக் குழுவில் கண்டிப்பாக இருக்கக்கூடாது...அப்படி இருந்தால் அது ஏக இரச்சு என்றழைக்கப்பட்டு, மணப்பெண்ணின் தாலிப்பேறு பாதிக்கப்படுமென்பதால், கயிற்றுப்பொருத்தம் பார்ப்பது அதி முக்கியமானதாகும்...
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A felicitous agreementin the nakṣatras of the bridegroom and the bride necessary for the assumption of the marriage badge
- (Astrol.) A felicitous agreement in the nakṣatras
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +