களைக்கட்டு

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

களைக்கட்டு, (உரிச்சொல்).

  1. சுறுசுறுப்பாதல்
  2. தீவிர பயனுக்கு வருதல்
  3. முழுவீச்சில் இயங்குதல்
  4. இசைச்கருவிகளின் நாதம் அடக்கமான இடத்தில் நன்கு ஒலித்தல்.

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. become lively
  2. become busy
  3. become active
  4. to sound effectively, as music within an enclosure;

விளக்கம் தொகு

  1. களை என்றால் கொச்சை மொழி பயன்பாட்டில் அழகிய/மகிழ்ச்சித் தரக்கூடிய நிலைமை/தோற்றம் என்னும் பொருளாம்... எந்தவிடயமும் சுறுசுறுப்பாக முழுவீச்சில் பயன்தரத்தக்க முறையில் இயங்கினால் அது மகிழ்ச்சியைதான் தரும்.
  2. இசை நிகழ்ச்சிகளில் பலவிதமான இசைக்கருவிகளின் நாதம் ஒன்றிணைந்து கேட்க மிக இனிமையாக அடக்கமான இடத்தில் நன்கு ஒலிக்கும்போது, 'ஆகா, கச்சேரி களைக்கட்டிவிட்டது' என்பர்...

பயன்பாடு தொகு

  1. நம் காய்கறி அங்காடிக்கு வரவேண்டிய காய்கறிகள் வெளியூரிலிருந்து நேரத்தில் வந்துவிட்டன...வியாபாரிகளும் மற்ற ஊழியர்களும் வந்தாயிற்று... பொதுமக்களும் வரத்துவங்கிவிட்டனர்... மொத்தத்தில் அங்காடி களைகட்டிவிட்டது...எனவே நம் வியாபாரமும் சக்கைபோடு போடும்.


( மொழிகள் )

சான்றுகள் ---களைக்கட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=களைக்கட்டு&oldid=1221770" இலிருந்து மீள்விக்கப்பட்டது