கழிச்சல்
கழிச்சல்-பெரும்பீதியைக் காட்டும் கண்கள்
கழிச்சல்-பெரும்பீதியைக் காட்டும் கண்கள்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கழிச்சல், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. ஒரு வகை வயிற்றுப்போக்கு
  2. பயத்தினால் ஏற்படும் பேதி
  3. பெரும்பீதி, கொலைப்பயம்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. purgation
  2. diarrhœa, looseness of bowels
  3. extreme fear, producing instantaneous diarrhœa.

விளக்கம் தொகு

  • மலத்தோடோ, மலமில்லாமலோ கடும் துர்நாற்றத்தோடு நீர் நீராக அடங்காமல் போகும் வயிற்றுப்போக்கு...பெரும்பீதியின் காரணமாக உண்டாகும் வயிற்றுப்போக்கும் கழிச்சல் எனப்படும்...பெரும்பாலும் மரணத்தறுவாயில் உண்டாகிறது...எனவேதான் 'கழிசல்லே போக' என்னும் வசைச்சொல் ஏற்பட்டது...

பயன்பாடு தொகு

  1. இரகு ஒரு மாதமாக உடல் நலமில்லாமல் படுத்த படுக்கையாகக் கிடக்கிறான்...நேற்றிலிருந்து கழிச்சல் வேறு கண்டுவிட்டது...என்ன ஆகுமோ தெரியவில்லை! (பேதி)
  2. சீறும் பாம்பைக்கண்டால் எல்லாருக்கும் கழிச்சல்தான்...(பெரும்பீதி)
  3. இரவு நேரங்களில் பேய் பிசாசு என்றாலே சிலருக்கு கழிச்சல் கண்டுவிடும்...(பெரும்பீதி)


"https://ta.wiktionary.org/w/index.php?title=கழிச்சல்&oldid=1225496" இலிருந்து மீள்விக்கப்பட்டது