கஸ்தூரி மஞ்சள்
தமிழ்
தொகு- curcuma aromatica (தாவரவியல் பெயர்)/
- Curcuma longa syn. C. domestica (தாவரவியல் பெயர்)
கஸ்தூரி மஞ்சள், .
பொருள்
தொகு- நறுமணமுள்ள மஞ்சள்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- aromatic turmeric
விளக்கம்
தொகு- மிகுந்த நறுமணமுள்ள ஒரு மஞ்சள் வகை...உலர்ந்த இந்தக் கிழங்குகளை நறுமணக் கலவைப் பொடிகளிலும், முடித்தைலங்களிலும் கூட்டுவர்...தனியாகவும் இதன் பொடியை பெண்கள் உடலில் தேய்த்துக் குளிப்பர்...சமையலுக்கு பயன்படுத்தமாட்டார்கள்...
மருத்துவ குணம்
தொகு- கஸ்தூரி மஞ்சள் பெருவிரணம், கரப்பான், கிருமிரோகம், அக்கினிமந்தம் இவைகளைப் போக்கடிக்கும்...மேலும் வீரியமும், அறிவும் அதிகரிக்கும்...
பயன்படுத்தும் முறை
தொகு- கஸ்தூரி மஞ்சள் பொடியைத் தனியாக அல்லது கிச்சிலிக்கிழங்கு, சந்தனக்கட்டை, கோரைக்கிழங்கு, கசகசா ஆகியவைகளோடுக் கூட்டி அரைத்துத் தேய்த்துக் குளிக்க சொறி, சிரங்கு, கரப்பான் போகும்...உடலின் கற்றாழை நாற்றம் நீங்கும்...இதன் தூளை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி அடிபட்ட வீக்கங்களுக்கும் நரம்பின் வலிகளுக்கும் மேல் தேய்த்துவந்தால் குணமாகும்...
- இதன் சூரணத்தை 2--5 குன்றி எடை சீனியுடன் கலந்து தினமும் இரண்டு வேளை கொடுக்க வயிற்றிலுள்ள வாயுவைக் கண்டிக்கும்...வயிற்று வலி, செரியாமையும் போகும்..