கியாழம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கியாழம், .
பொருள்
தொகு- வடிசாறு
- கசாயம்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- herbal decoction
விளக்கம்
தொகு- திசைச்சொல்--வடமொழி மூலம்--कषाय..க1-ஷாய எனும் சொல்லிலிருந்து...நாட்டு/வீட்டு மருத்துவ சிகிச்சைகளில் கியாழமிட்டுக் கொடுப்பது ஒரு முறை...நோய்க்கு ஏற்றாற்போல் சுக்கு,மிளகு திப்பிலி, சிற்றரத்தை போன்ற பொருட்களில் ஒன்றோ அல்லது இரண்டோ அல்லது துளசி போன்ற இலைகளையோ பொடித்து அல்லது நசுக்கி நிறைய சுத்தமானத் தண்ணீர் விட்டு சுண்டக் காய்ச்சி வடிகட்டி சர்க்கரை,பால் சேர்த்தோ சேர்க்காமலோ பருகக் கொடுப்பார்கள்...இந்தத் தயாரிப்பே கியாழம் எனப்படுகிறது.
பயன்பாடு
தொகு- இராமுவிற்கு கொஞ்சம் மிளகு, சிற்றரத்தைக் கியாழம் போட்டுக்கொடு...ஜலதோஷமும், இருமலும் குறையும். நன்றாகத் தூங்குவான்!!
( மொழிகள் ) |
சான்றுகள் ---கியாழம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி