குத்துக்காற்சம்மட்டி வேர்

இந்த இனத்தின் பலவகை மூலிகைச் செடிகளின் பொதுத்தோற்றம்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

குத்துக்காற்சம்மட்டி வேர், .

பொருள்

தொகு
  1. ஓர் அரிய மூலிகை வேர்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. a rare medicinal root

விளக்கம்

தொகு
  • குத்து + கால் + சம் + மட்டி = வேர் =குத்துக்காற்சம்மட்டி வேர்.
  • பச்சைக் குத்துக்காற்சம்மட்டி வேர் இருபத்து நான்கு வகையான மகாவாதங்களையும், மேகக்கட்டிகளையும், திமிர் வாதம் மற்றும் மூர்ச்சையின் அயர்வையும் போக்கடிக்கும்...
  1. இந்த வேரை ஒரு எடைக்கு பத்து மடங்கு நீரில் கொதிக்கவைத்து ஆறியபின் வடித்து வேளைக்கு ஒரு அவுன்ஸ் தினம் இரண்டு, மூன்று வேளை கொடுத்துவர நஞ்சால் ஏற்பட்ட பல உபத்திரவங்கள் போகும்...
  2. உடம்பு வலுவைப் பொறுத்து அரை முதல் ஒரு பலம் வரை எடையுள்ள பச்சை வேரைப் பாலில் காய்ச்சி காலையில் கொடுத்தால் நன்றாக பேதி ஆகும்...இதனால் ஓடுவாயு, திமிர் வாயு, கட்டி ஆகியவை போகும்...
  3. இந்தச்செடியின் காம்புகளைக் கியாழமிட்டுக் கீல்களில் வந்த வலி, பிடிப்புகளுக்கு ஒற்றடம் கொடுக்க அவை மறையும்...அல்லது நோயுள்ள பாகத்தில் கியாழத்தைப் பொறுக்கக்கூடியச் சூட்டில் தாரையாக விட்டுக்கொண்டுவரக் குணமாகும்... அல்லது கியாழத்தை வேளைக்கு அரை, முக்கால் அவுன்ஸ் வீதம் சாப்பிடக்கொடுக்கலாம்...
  4. இரசகெந்தி விடத்தினாலுண்டான வாய்வேக்காடு இந்தக் கியாழத்தில் வாய் கொப்பளித்தால் ஆறும்...
  • இது மிகச்சிறப்பு வாய்ந்த மூலிகை...இதை சாப்பிடும்போது பெரும் பத்தியம் இருத்தல் வேண்டும்...இது சம்பந்தமான கியாழம் அல்லது எண்ணெய் உட்கொள்ளும்போது, அவைகளைச் சாப்பிட்டு சிகிச்சையை குளித்து முடிக்கும்வரை எக்காரணம்கொண்டும் இரும்பைத்தொடக்கூடாது...இந்த செய்கை மருந்தின் வீறைக் கெடுத்துவிடும்...இந்த மூலிகையைக்கொண்டு குத்துக்காற்சம்மட்டி எண்ணெய் தயாரிப்பர்.


( மொழிகள் )

சான்றுகள் ---குத்துக்காற்சம்மட்டி வேர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி