குஸ்மந்தா தேவி
தமிழ்
தொகுகுஸ்மந்தா தேவி, .
பொருள்
தொகு- இறைவி துர்கையின் ஒன்பது அம்சங்களில் (நவதுர்கா) ஓர் அம்சம்.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- one of nine features of goddess durga--kusmandha
விளக்கம்
தொகு- புறமொழிச்சொல்....வடமொழி...कुशमन्दा देवी....கு1-ஸ்மந்தா3- தேவி...குஸ்மந்தா தேவி....இறைவி துர்காதேவி வழிபாட்டில் தலைசிறந்தவர்களான வங்கநாட்டு/வட இந்திய மக்கள் ஒன்பது அம்சங்களில் துர்காதேவியை மிகச்சிறப்பாக வழிபடுகிறார்கள்...அவைகளில் ஓர் அம்சம் குஸ்மந்தா தேவி என்பதாகும்...ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி துர்கை பூசை விழாவில் நான்காம் நாள் இரவு பூசிக்கப்படும் இறைவியின் திருவுருவம் இதுவேயாகும்...
- இந்த தேவியின் புன்சிரிப்பு உலகத்தை வாழ வைக்கும் சக்தி கொண்டது என்று தேவி பாகவதம் போற்றுகிறது...சூரிய மண்டலத்தில் வசிக்கும் இத்தேவி, சூரியனைப்போல் பல திசைகளிலும் தன் ஒளியை வீசி அருள்புரிகிறாள்...சிங்கத்தை வாகனமாகக் கொண்டவள்...எட்டு கைகளில் சக்கரம், கதை, ஜெபமாலை, அமிர்த கலசம், தாமரை, வில், அம்பு, கமண்டலம் கொண்டு வீற்றிருக்கிறாள்...இவளை கூஷ்மாண்டா தேவி என்றும் அழைப்பர்...
- மற்ற எட்டு அம்சங்களின் பெயர்கள் பிரம்மசாரிணி, சந்திரகன்டா, காளராத்திரி, காத்யாயனி, மகாகௌரி, சைலபுத்திரி, சித்திதாத்திரி, ஸ்கந்தமாதா ஆகியவைகளாகும்.