கூடமாடப் (போதல்)

சொல் பொருள்

கூட – ஆள் துணையாகப் போதல். மாட – பேச்சுத் துணையாகப் போதல்.

விளக்கம்

துணைகளில் வழித்துணையாக வருவாருள் வலுத்துணையும் உண்டு; வாய்த் துணையும் உண்டு. முன்னது வழித்துணை; பின்னது வாய்த்துணை.

கூடமாட வேலை செய்தல் என்பதில் கூட என்பது கூடியிருந்து வேலை செய்தலையும், மாட என்பது பேச்சுத் துணையாக இருந்து வேலை செய்தலையும் குறிக்கும். மாற்றம்-சொல்; மாட்டாடுதல் ‘பேசுதல்’ என்னும் பொருள் தரும் தெலுங்குச் சொல்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=கூடமாட&oldid=1913186" இலிருந்து மீள்விக்கப்பட்டது