கூட்டமுது
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கூட்டமுது, .
பொருள்
தொகு- காய்களையும், பருப்பையும் கூட்டிச் செய்யப்படும் உணவு.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- cooked vegetables mixed with lentils called koottu in tamils' cooking
விளக்கம்
தொகு- கூட்டு + அமுது = கூட்டமுது...தமிழக உணவில் சாதம், சாம்பார், பொரியல், துவையல், பச்சடி போன்ற ஒரு பண்டம் கூட்டமுது அல்லது கூட்டு... ஒரு காய் அல்லது பல காய்களைத் துண்டுத் துண்டாக நறுக்கிப் பாசிப்பருப்புடன் கூட்டி வேகவைத்து, உப்பு சேர்த்து, கடுகு, பெருங்காயம், கிள்ளிய வத்தல் மிளகாய், கறிவேப்பிலை தாளித்து சற்று நீர்த்த நிலையில் திடமாகத் தயாரித்துக்கொண்டு சாதத்தோடு கலந்தோ அல்லது தொட்டுக்கொண்டோ உண்பார்கள்...புளி சேர்க்காமல் பொரித்தக்கூட்டு என்றும், புளி சேர்த்து புளித்தக்கூட்டு என்றும் அழைப்பார்கள்...பொதுவாக பொரித்தக் கூட்டுக்கு பாசிப்பருப்பையும், புளித்தக்கூட்டுக்கு துவரம் பருப்பையும் பயன்படுத்துவர்...கூட்டமுது தயாரிப்பில் பலவிதமான பக்குவங்கள் உண்டு...