கூந்தற் தைலம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கூந்தற் தைலம், .
பொருள்
தொகு- கேசத் தைலம்
- முடி வளர்ச்சிக்கான எண்ணெய்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- hair oil
விளக்கம்
தொகு- நேரடியாக மூலப்பொருட்களிலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட எண்ணெய்களையே எண்ணெய் என்றும், அதோடு மருத்துவத்திற்காகவோ அல்லது உடம்பின் ஆரோக்கியத் தேவைகளுக்காகவோ வேறு மூலிகை/தாவரங்களோடு சேர்த்துக் காய்ச்சித் தயாரிக்கப்பட்ட எண்ணெயை தைலம் என்றும் சொல்வர்...இவ்வகையில் தலைமுடி (கூந்தல்) நீண்டு வளர, இளநரை நீங்கி கருமைநிறம் பெற, முடி உதிராமலிருக்க, பொடுகு வராமல் தடுக்க இன்னும் பலவிதமுடிப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் தைலங்கள் கிடைக்கின்றன...இவைகளையே கூந்தற் தைலம் என்கிறோம்...இவை பெரும்பாலும் தேங்காயெண்ணெய் மற்றும் மூலிகைகள்/தாவரங்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன...சற்று நறுமணமும் கூட்டப்படுகிறது...இத்தகைய தைல வகைகளில் நெல்லிக்காய்த் தைலம் (ஆம்லா) மிகப் பிரபலமானது...கூந்தற் தைலங்கள் காய்ச்சப் பயன்படும் மூலப்பொருட்கள் அநேக வகையானவை...அந்தந்த மூலப்பொருட்களின் பெயரை முன்னொட்டாகச் சேர்த்து கூந்தற் தைலம் என அழைக்கப்படுகின்றன...