கையொடுகாவலாய்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கையொடுகாவலாய், உரிச்சொல்.
- (கையொடு+காவல்+ஆய்)
- சமயத்துக்குதவியாய் (பேச்சு வழக்கு)
- கைகாவல் (பெயர்ச்சொல்)
விளக்கம்
தொகுமிகவும் அவசியமானப் பொருட்களை தேவைக்கும்மேல் சற்று அதிகமான எண்ணிக்கையில் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதைக் குறிக்கும் சொற்றொடர் கையொடுகாவலாய்...கையிருப்பு எதிர்பாராதவிதமாகக் குறைந்துவிட்டால்/தீர்ந்துவிட்டால் உடனே கிடைக்காமல் போகலாம்...அதனால் இடர்கள் வரலாம்...பேச்சு வழக்கில் கையோடு காவலுக்கு என்னும் சொற்றொடரையும் பயன்படுத்துவர்.. .
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- As a help in emergencies
பயன்பாடு
தொகுதேர்வு எழுதப்போகிறாய்...கையொடுகாவலாய் இன்னும் ஒர் எழுதுகோலைக் கொண்டுபோ...மை தீர்ந்துவிட்டால் பிரச்சினைதான்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +