கொத்துக்கடலை
தமிழ்
தொகு
|
---|
- கொத்து + கடலை
- 'Cicer arietinum..seeds (தாவரவியல் பெயர்)
பொருள்
தொகு- கொத்துக்கடலை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- மனிதர்களுக்கு உணவாகப் பயன்படும் கடலை/பருப்புவகைகளில் முக்கியமானதொன்று கொத்துக்கடலை...கொத்து கொத்தாகக் காய்ப்பதால் இப்பெயர் வந்தது...முழுக் கடலையாகவும், உடைத்துப் பருப்பாகவும், அரைக்கப்பட்டு மாவாகவும் பலவிதங்களில், பலவிதமான சமையற்பக்குவங்களில் உலகமுழுவதும் பயன்படுத்தப்படுகிறது...தமிழகத்தில் முழுக்கடலை முக்கியமாக சுண்டல் செய்யவும், வட இந்தியப்பகுதிகளில் சோ1லே எனும் உணவுத் தயாரிக்கவும் பயன்படுகிறது...இந்தியில் ச1னா எனக் குறிப்பிடப்படுவது கொத்துக்கடலைதான்...முன்பு வீடுகளிலேயே காஃபி பானத்திற்கு திடத்தன்மையையுண்டாக்க சிக்கோரிக்குப் பதிலாக கொத்துக்கடலையை கறுக்க வறுத்து, வறுத்தக் காஃபிக்கொட்டையுடன் சேர்த்து அரைத்துப் பயன்படுத்தினர்...கொத்துக்கடலையில் பழுப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை ஆகிய நிறபேதங்கள் உண்டு...