கொளுத்து
தமிழ்
தொகுகொளுத்து வினைச்சொல் .
பொருள்
தொகு- தீப்பற்றவை
- எரியூட்டு
- தீ மூட்டு
- தீயிடு
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- ignite
- set fire
விளக்கம்
தொகுதேவையற்ற பொருட்களைத் தீயிட்டுப் பொசுக்கி அழிப்பது ஒரு நடைமுறையிலுள்ள வழக்கமாகும்...செயற்கையாக, வேண்டுமென்றே தீயிடுவதற்குக் கொளுத்துதல் என்பர்...அரசியல் போராட்டங்களில் வன்முறையாளர் கண்ணில் படுவனவற்றைக் கொளுத்தும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன...சாதி, மத, அரசியல் கலவரங்களிலும் ஒருதரப்பினர் சொத்துக்களை மறுதரப்பினர் தீயிட்டுக் கொளுத்தி அழிப்பது காலம் காலமாக நடந்துவரும் ஒரு கொடுமை...காய்ந்து சருகாகிப்போன தாவரப் பகுதிகள், உதவாத மரத்துண்டுகள், காகிதம், அட்டை போன்ற எரியக்கூடிய பொருட்களையும் கொளுத்திக் கழிப்பர்...தன்னலத்திற்காகக் காடுகளைக் கொளுத்தும் சமூகவிரோதிகளும் உள்ளனர்..
( மொழிகள் ) |
சான்றுகள் ---கொளுத்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி