கோடரிக்காம்பு
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கோடரிக்காம்பு, .
பொருள்
தொகு- உள்ளகத் துரோகி
- கோடரிக்கு இணைக்கப்படும் மரத்தினாலான காம்பு.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- a traitor within
- one who destroys or undermines one's own family.
- a wooden handle fixed to an axe.
விளக்கம்
தொகு- கோடரி + காம்பு = கொடரிக்காம்பு
- கோடரியைப் பயன்படுத்த அத்துடன் இணைக்கப்படும் மரத்தினாலானக் காம்பு.
- கோடரி என்பது ஓர் அழிவை உண்டாக்கும் கருவி...ஆனால் அதைத் தனியாகப் பயன்படுத்தமுடியாது...ஒரு நீண்ட மரக்காம்பை அதனுடன் இணைத்தால்தான் அந்த மரக்காம்பைக் கைகளால் பயன்படுத்திக் கோடரியால் மரங்களை வெட்டிச் சாய்க்கலாம்...அது போலவே எளிதில் அழிக்கப்படமுடியாத ஓர் இனம், குலம் அல்லது நாட்டை வெற்றிக் கொள்ளவேண்டுமானால் அந்த இனம், குலம் அல்லது நாட்டின் எல்லா இரகசியங்களையும், பலம், பலகீனங்களையும் நன்கு அறிந்த அதே இன,குல,நாட்டு மனிதனே தேவைப்படுவான்...அத்தகைய ஒருவனை எதிரிகள் இனம் கண்டு தங்களுடன் எதாவது ஒருவகையில் சேர்த்துக்கொண்டாலோ அல்லது அந்த மனிதனே சுயநலத்திற்காக எதிரிகளிடம் போய்ச் சேர்ந்தாலோ எளிதில் அழிக்கப்படமுடியாதவர்களும் வீழ்ந்துவிடுவர்...ஆக எதிரியாகிய ஒரு கோடரிக்குக் காம்பாகப் போகும் இத்தகைய மனிதனுக்கு கோடரிக்காம்பு என்று அதாவது துரோகி என்று பெயர்...
- ஆதாரம்....[1]