கோபுரக்குதிரை

கோபுரக்குதிரை
கோபுரக்குதிரை
கோபுரக்குதிரை


தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கோபுரக்குதிரை, பெயர்ச்சொல்.


பொருள் தொகு

  1. ஒட்டகச் சிவிங்கி
  2. ஒரு விலங்கு இனம்


மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. giraffe


விளக்கம் தொகு

  • ஒட்டகத்தைப்போலவே உயர்ந்த உருவமும், நீண்ட கழுத்தும் உடைய ஒரு காட்டு விலங்கு...இவை தாவர உண்ணிகள்...ஆஃப்ரிகா கண்டத்துக் காடுகளில் பெருவாரியாக வாழ்கின்றன...நிலத்தில் வாழும் விலங்கு இனங்களிலேயே மிக உயரமானவை...தின்ற தாவர உணவுகளை இரைப்பையில் சேகரித்து அவைகளை நொதிக்கசெய்து பின்னரே செரிமானம் செய்துகொள்ளும் திறனுடையவை...ஆண் ஒட்டகச் சிவிங்கிகள் 16 முதல் 18 அடி உயரமும் (4.8 முதல் 5.5 மீற்றர்) 900 கிலோ கிராம் வரை எடையும் கொண்டவை...பெண் ஒட்டகச் சிவிங்கிகள் ஆண்களைவிடப் பொதுவாக உயரத்திலும் நிறையிலும் குறைந்தவை...ஒட்டகச் சிவிங்கிகளின் அடி வயிறு நீங்கலாக மற்ற உடற்பகுதிகள் முழுதும் செம்பழுப்பு நிற திட்டுகள் காணப்படுகின்றன...இவற்றின் அமைப்பு ஒன்றுக்கொன்று மாறுபட்டவைகளாக உள்ளன...இவ்விலங்கின் நாக்கு நீலநிறமானது... இவற்றின் முன்னங்கால்கள் பின்னங்கால்களைவிட நீளமானவை...இவற்றின் இதயம் 10 கிலோ கிராம் நிறையுடையது...தமிழக நீலகிரி மாவட்டத்தில் சில பழங்குடி மக்கள் இந்த விலங்கை கோபுரக்குதிரை என்றே குறிப்பிடுகின்றனர்...கோபுரத்தைப்போன்ற உயரமும், ஏறக்குறைய குதிரையைப்போல முகத்தையும் கொண்டிருப்பதால் இருக்கலாம்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கோபுரக்குதிரை&oldid=1430946" இலிருந்து மீள்விக்கப்பட்டது