கோரலின்மை வெகுமதி
கோரலின்மை வெகுமதி என்பது காப்பீட்டு நிறுவனங்களால் ஈட்டுறுதியாளர்களுக்கு (காப்பீட்டு ஆவணங்களின் உரிமையாளர்களுக்கு) குறிப்பிட்ட காப்பீட்டு கால அளவுக்குள் காப்புறுதி உரிமைகோரல் ஏதும் இல்லாத பட்சத்தில் ஊக்குவிப்பு வெகுமதியாக வழங்கப்படும் ஒரு தொகையாகும். பொதுவாக இத்தொகை காப்பீட்டு ஆவணத்தின் புதுப்பிப்பின் போது காப்பீட்டு தவணைத் தொகையிலிருந்து கழிவாக வழங்கப்படுகின்றது.