சாகை--மரக்கிளை
சாகை-கை(கள்)
சாகை-இலை
சாகை-வட்டில்-படத்தின் மேற்புறம் வலதுபக்கத்துப் பொருள்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சாகை, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. வாழுமிடம்
  2. இடம்
  3. மரக்கிளை
  4. கிளைக்குடும்பம்
  5. கை
  6. வேதத்தின் உட் பிரிவு
  7. வேதம்
  8. இலை
  9. இறப்பு (மரணித்தல்))
  10. வட்டில்பாரசீகத்தில் மூலச்சொல்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. living place
  2. place
  3. branch of a tree
  4. clan/branch of a family
  5. hand
  6. section/chapter of veda
  7. Veda, the holy scriptures of hindus
  8. leaf
  9. death
  10. small cup

விளக்கம் தொகு

புறமொழிச்சொல்...பல அர்த்தங்களைக்கொண்ட இந்தச்சொல்லின் மூலம், பொருட்களுக்குத் தக்கவாறு இந்தி/உருது, வடமொழி, தமிழ் மற்றும் பாரசீக மொழிகளிலுள்ளது...இன்று பேச்சு வழக்கில் வாழுமிடத்தைக் குறிக்கும் ஜாகை என்னும் சாகைக்கு மூலம் இந்தி/உருது....இந்தி/உருது (जगह) ஜக3--ஹ் தெலுங்கில் (జాగా) ஜாகா3-ஆகி பின்னர் தமிழில் ஜாகை ஆனது..பிறகு கிரந்த எழுத்து 'ஜ' நீங்கி 'சாகை' என்றானது...சமசுகிருதச் சொல் शाखा...ஸ்யாகா2-.. என்பதே பொருள் எண் 3 முதல் 8 வரை உள்ள சொற்களுக்கு மூலச்சொல்லாகும்...ஸ்யா என்னும் ஒலிக்கு தனி ஒரு கிரந்த எழுத்து இருப்பினும் அது தமிழில் பரவலான பயன்பாட்டிற்கு ஏற்கப்படவில்லை...

பயன்பாடு தொகு

  1. இரகுவுக்கு நெல்லையில்தான் சாகை.
  2. இந்த சாகை பெரியதாக நன்றாகயிருக்கிறது.
  3. சாகை வசதியாக இருந்தால்தான் அங்கு இருக்கப் பிடிக்கும்.


( மொழிகள் )

சான்றுகள் ---சாகை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாகை&oldid=1223700" இலிருந்து மீள்விக்கப்பட்டது