சாத்துக்குடிப் பழம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சாத்துக்குடிப் பழம்,
பொருள்
தொகு- ஒரு பழ வகை.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A variety of Citrus limetta fruits.
- Some times called as 'tight jacket' as against 'loose jacket' for oranges.
- தெலுங்கு
- బతాయ కాయలు
- இந்தி
- मोसम्बी
விளக்கம்
தொகு- ஆரஞ்சுப் பழங்களைப்போல் வடிவுடையதான, சுவையுள்ள சுளைகளைக்கொண்ட இந்தப் பழங்கள் எத்தகைய நோயுற்றோருக்கும் மிகச் சிறந்த உணவாகும்... தமிழ் நாட்டில் சாத்துக்குடி என்ற கிராமப் பகுதியில் முதன்முதலில் விளைவிக்கப்பட்டு நாடெங்கும் பரவியதால் சாத்துக்குடி என்றப் பெயரைப்பெற்றது...
மருத்துவ பலன்கள்
தொகு- இப்பழங்களை தினந்தோறும் காலை, மாலை, இரவு உணவுக்குப்பின்பு சாப்பிட்டுவர இருதயத்திற்கு பலத்தைக் கொடுக்கும்...நல்ல இரத்தத்தை உடலெங்கும் பரவச்செய்யும்...நாவின் அரோசகத்தைமாற்றி உருசியை உண்டாக்கும்...ஐம்புலனறிவை அதிகப்படுத்தி இரத்தத்திலுள்ள மாசுக்களை சிறுநீர் வழியாக வெளியேற்றும்...சீரணசக்தியை மேம்படுத்தி மலச்சிக்கலைக் கண்டிக்கும்... ஆனால் இந்த நற்குணங்களெல்லாம் இனிப்புச்சுவையுள்ளப் பழங்களுக்கே! புளிப்புச் சுவையுள்ளப் பழங்கள் கபத்தை விருத்திச் செய்து உடல்நலனைக் கெடுத்துவிடும்.