சிங்க சொப்பனம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தமிழ்
தொகுசிங்க சொப்பனம், .
பொருள்
தொகு- நினைப்பிலேயே பெரும் பீதி/பயம் கொள்ளல்
- சொல்லின் நேரடிப் பொருள் யானை சிங்கங்களைக் கண்ட சொப்பனம்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- getting scared even in thought.
விளக்கம்
தொகு- யானைகளையும் கொன்றுவிடக் கூடியது சிங்கக்கூட்டம்...காட்டில் யானைகளுக்கு இருக்கும் ஒரேஒரு எதிரி சிங்கங்கள்தான்...அகவே யானை தன்னைச் சிங்கம் தாக்குவதாகக் கனாக்கண்டால், கண் விழித்த நிலையிலும் சதா அந்தக் கனவை நினைத்துக்கொண்டே பயந்து நடுங்குமாம்...அதைப் போலவே சில மனிதர்கள் சில சம்பவங்கள் அல்லது நபர்களை நினைத்து எப்போதும் மிக பயந்து நடுங்கிக்கொண்டிருப்பர்...இந்த நிலையை 'சிங்க சொப்பனம்' என்று சொல்வர்...
பயன்பாடு
தொகு- குற்றவாளிகளுக்கு எப்போதுமே காவல் துறை என்றால் சிம்ம சொப்பனம்தான்..கடந்த முறை இவர்கள் ஒரு வழக்கில் பிடிப்பட்டபோது காவல் துறையிடம் எப்படியெல்லாம் அவதிப்பட்டார்கள் என அவர்களுக்குத்தான் தெரியும்!...
- இவ்வளவு வயதாகியும், மீனாட்சிசுந்தரத்திற்கு இன்னமும் தன் தந்தை என்றால் சிம்ம சொப்பனம்தான்!!!.