சித்திதாத்திரி தேவி
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சித்திதாத்திரி தேவி, .
பொருள்
தொகு- இறைவி துர்கையின் ஒன்பது அம்சங்களில் (நவதுர்கா) ஓர் அம்சம்.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- one of nine features of goddess durga--Siddhidatri
விளக்கம்
தொகு- புறமொழிச்சொல்....வடமொழி...सिद्धिदात्री देवी....ஸித்3-தி4-தா3-த்1-ரி தே3-வி...சித்திதாத்திரி தேவி...இறைவி துர்காதேவி வழிபாட்டில் தலைசிறந்தவர்களான வங்கநாட்டு/வட இந்திய மக்கள் ஒன்பது அம்சங்களில் துர்காதேவியை மிகச்சிறப்பாக வழிபடுகிறார்கள்...அவைகளில் ஓர் அம்சம் சித்திதாத்திரி தேவி என்பதாகும்...ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி துர்கை பூசை விழாவின் முடிவாக ஒன்பதாம் நாள் இரவு பூசிக்கப்படும் இறைவியின் திருவுருவம் இதுவேயாகும்...இந்த இறைவியை சித்திமாதா என்றும் அழைப்பர்...கோரிக்கைகளின் சித்தியை (நிறைவேற்றம்) தரும் தாய் என்று பொருள்...
- இந்த இறைவி தாமரை மலர்மீது அமர்ந்திருப்பாள்...நான்கு கரங்கள் கொண்டவள்...வலது கீழ் கரத்தில் கதையும் மேல் கரத்தில் சக்கரமும்; இடது கீழ் கையில் தாமரையும் மேல் கரத்தில் சங்கும் கொண்டு தரிசனம் தருகிறாள்.. இவளின் திருமுகத்தைக் கண்டாலே முக்தி கிட்டும் என்பது நம்பிக்கை.
- மற்ற எட்டு அம்சங்களின் பெயர்கள் பிரம்மசாரிணி, சந்திரகன்டா, காளராத்திரி, காத்யாயனி, குஸ்மந்தா , மகாகௌரி, சைலபுத்திரி, ஸ்கந்தமாதா ஆகியவைகளாகும்.