சிரகம்
தமிழ்
தொகுஇல்லை | |
(கோப்பு) |
சிரகம், .
பொருள்
தொகு- தலைக்கவசம்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- helmet
விளக்கம்
தொகுவடமொழி மூலத்தைக் கொண்ட புறமொழிச்சொல்...சமசுகிருதத்தில் शिर.ஸிர. என்றால் தலை என்பதாகும்...எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பது பழமொழி...வாகன ஓட்டிகள் வேகமாக வாகனத்தில் பயணிக்கும்போது விபத்து ஏற்பட்டுத் தலையில் பலமான காயங்கள் ஏற்பட்டால் உயிர் பிழைப்பது அரிது...ஆகவே தலையை இப்படியான சமயத்தில் காப்பாற்றிக்கொள்ள தலைக்கவசம் அணிவர்...இதுவே சிரகம் எனப்படுகிறது...சரித்திரக் காலத்தில் போர்களில் எதிரிகளின் வாள்/கத்தி வெட்டுகளிலிருந்து தலையைக் காப்பாற்றிக் கொள்ள சிரகம் அணிவர்... தற்காலத்தில் போக்குவரத்து, விளையாட்டு, நீச்சல், போர், மருத்துவத் தேவைகள், கட்டுமானம் போன்ற இன்னும் தொழில் தொடர்பான அநேகத் தேவைகளுக்கு ஏற்ப விதவிதமான சிரகம் தயாரிக்கப்படுகிறது...பண்டைய நாட்களிலிருந்து வெள்ளி, தங்கம்,தேனிரும்பு,இரும்பு, வெண்கலம், தோல், நெகிழி போன்ற இன்னும் பல பலவிதமான மூலப்பொருட்களைக்கொண்டு சிரகம் தயாரிக்கப்பட்டு வந்தது/வருகிறது..
( மொழிகள் ) |
சான்றுகள் ---சிரகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி