சுக்காங்கீரை

சுக்காங்கீரை
சுக்காங்கீரை

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

(Rumex vesicarius...(தாவரவியல் பெயர்)) சுக்காங்கீரை, .

பொருள்

தொகு
  1. ஒரு வகை உணவுக்கீரை

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. a leafy vegetable
  2. bladder dock, rosy dock

விளக்கம்

தொகு
  • புளிப்புச் சுவையுள்ள குளிர்ச்சித் தரும் கீரை...பருப்புடன் சேர்த்துக் கடைந்து தனியாக அல்லது இறைச்சியுடன் சேர்த்துக் குழம்பு செய்து உண்பர்... இது உட்சூட்டைத் தணித்து செரிமானத்தை அதிகரிக்கும்...வயிற்றில் வாயுவைக் கண்டித்து உடம்பில் பித்தத்தினால் உண்டான ஊறல் மற்றும் தழும்பலை குணப்படுத்தும்...
  • இதன் தனி இலைச்சாற்றை வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் தினம் மூன்று வேளை சிறிது சர்க்கரைக் கூட்டிக் கொடுத்தாலோ அல்லது ஒரு பலம் சுத்தமான சுக்காங்கீரையைப் பொடியாக அரிந்து ஒரு பழகிய மட்குடுவையில் போட்டு கால்படி சுத்த நீர்சேர்த்துச் சிறு தீயில் எரித்து 1/8 படி அளவிற்குச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்சு வீதம் தினம் மூன்று வேளைக் கொடுத்தாலோ இரத்தம் சுத்தியாகும்...மேலும் மாமிச கோளங்களில் சேர்ந்துள்ள துர்நீர் வெளியாகும்...சொறி, சிரங்கு ஆகியவை குணமாகும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=சுக்காங்கீரை&oldid=1387921" இலிருந்து மீள்விக்கப்பட்டது