சும்மா
ஒலிப்பு
(கோப்பு)
சும்மா(பெ)
பொருள்
- கீழே பதினைந்து அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்புகள்
- 1)lazily, 2)leisurely, 3)just forfun, 4)withoutanyreason, 5)justbecauseஆங்கிலம்
- 1)quiet =அமைதியாக
- 2)in fact =உண்மையில்
- 3)idle =வீணாக
- 4)free of cost =இலவசமாக
- 5)lie =பொய்
- 6)without use =உபயோகமற்று
- 7)very often =அடிக்கடி
- 8)always =எப்போதும்
- 9)just =தற்செயலாக,வெறுமே
- 10)empty =காலி
- 11)repeat =மறுபடியும்
- 12)bare =ஒன்றுமில்லாமல்
- 13)lazily =சோம்பேறித்தனமாக
- 14)leisurely =களைப்பாறிக்கொண்டு
- 15)just for fun =விளையாட்டிற்கு
விளக்கம்
தொகுசென்னை வட்டார வழக்கு..பயன்படுத்தும் இடத்தின்படியும் தொடரும் சொற்களின்படியும் பதினைந்து அர்த்தங்களைக் கொடுக்கிறது.
பயன்பாடுகள் (அடைப்புகளில் தெரிவிக்கும் பொருள்)
தொகு- 1)சும்மா இரு, கத்தாதே ( quiet-அமைதியாக) = Do not shout, be quite.
- 2)சும்மா சொல்லக்கூடாது, அவன் நன்றாகவே பாடினான் (in fact-உண்மையில்) = In fact he sang well.
- 3)வேலை வெட்டி ஒன்றுமிலை, சும்மாதான் இருக்கிறான் (idle-வீணாக) = He has no job, he is idle.
- 4)இந்த காலத்தில் ஒன்றும் சும்மா கிடைக்காது (free of cost-இலவசமாக) = In these days we will not get anything free of cost.
- 5)அவன் அங்கு போகவில்லையென்று சும்மா சொல்கிறான் (lie-பொய்) = He is telling a lie that he has not gone there.
- 6)இந்த பேனா என்னிடம் சும்மாதான் இருக்கிறது, நீ எடுத்துக்கொள் (without use-உபயோகமற்று) = This pen is without any use with me. You take it.
- 7)என் வீட்டிற்கு சும்மா சும்மா வராதே (very often-அடிக்கடி) = Do not visit my house very often.
- 8)சும்மா அதையே சொல்லிக்கொண்டிருக்கிறான் (always-எப்போதும்) = He always tells the very same thing.
- 9)உங்களை சும்மா பார்க்க வந்தேன் (just-தற்செயலாக, வெறுமே) = I just came to see you.
- 10)அந்த பெட்டி உள்ளே இன்றுமில்லை.சும்மாதான் கிடக்கிறது (empty-காலி) = There is nothing in that box. It is empty.
- 11)சொன்னதையே சும்மா சொல்லாதே (repeat-மறுபடியும்) = Do not repeat what you said.
- 12 நோயாளியை சும்மா பார்க்க போகக்கூடாது (bare-ஒன்றுமில்லாமல்-வெறுங்கையோடு) = We should not go to see a patient bare handed.
- 13)அவன் எப்போதும் சும்மா தூங்கிக்கொண்டேயிருக்கிறான் (lazily-சோம்பேறித்தனமாக) = He sleeps always lazily.
- 14)இப்போதுதான் வேலையை முடித்துவிட்டு சும்மா உட்கார்ந்து இருக்கிறான் (leisurely-களைப்பாறிக்கொண்டு) = He completed his work just now and sitting leisurely
- 15)பூனை பாலைக்குடிக்காமல் ஓடிவிட்டது என்று சும்மா சொன்னேன் (just for fun-விளையாட்டிற்கு) = I told just for fun that the cat ran away without drinking milk.
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - சும்மா