செங்கத்தாரி வேர்ப்பட்டை
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Capparis aphylla...(தா.இயல்-பெ)//
- Capparis decidua...(தா.இயல்-பெ)
செங்கத்தாரி வேர்ப்பட்டை, .
பொருள்
தொகு- செங்கத்தாரிமரத்து வேரின் பட்டை.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- bark of roots of tree 'capparis decidua'.
விளக்கம்
தொகு- அடர்ந்த புதர்போல் தோற்றமுடைய குறுமரங்கள் இவை...ஆஃப்ரிகா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியப் பகுதிகளில் மிக வறண்ட காலநிலையிலும் வளரக்கூடியது...அநேக மருத்துவ குணங்களைக் கொண்டது...இந்த மரத்தின் வேர்களிலிருந்து உரிக்கப்பட்ட பட்டை பிரமேக நீர், ஒட்டுப்புண், புரைகள், கீல்களை வீங்கச்செய்யும் கபமகாவாதம் இவைகளைப் போக்கும்...
- இந்தப்பட்டையை நீர்விட்டு மைய அரைத்து உடம்பில் பூசிச் சில நிமிடங்கள் உலரவிட்டுக் குளித்துவரக் கரப்பான், கிரந்தி, செங்கரப்பான், கொள்ளிக்கரப்பான் ஆகிய தோல் நோய்கள் நீங்கும்...அல்லது வேரைப் பால்விட்டு அரைத்து அந்தியும் சந்தியும் ஒரு கொட்டைப்பாக்கு அளவு பாலில் கலக்கிக் குடித்துக்கொண்டு வந்தாலும் மேற்சொன்ன நோய்கள் போகும்...இதர சரக்குகளுடன் கூட்டி கரப்பான் எண்ணெய்,செங்கத்தாரி எண்ணெய் போன்ற மருந்து எண்ணெய்களைத் தயாரித்து கரப்பான் போன்ற தோல் நோய்களுக்கு உள்ளுக்கு சாப்பிடக்கொடுப்பர்.