செங்குருதியணு
- செங்குருதியணு அல்லது இரத்தச் சிவப்பணு (Erythrocytes or Red blood cell) (இலங்கை வழக்கு: செங்குருதிக் கலம் அல்லது செங்குருதிச் சிறுதுணிக்கை) முதுகெலும்புடைய விலங்குகளின் குருதியில் உள்ள உயிரணுக்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளனவாகும்.
- இவையே இவ் விலங்குகளில் பிரணவாயுவை நுரையீரலிலிருந்து இழையங்களுக்கு எடுத்துச் செல்கின்றன.
- பிற்பாடு, இழையங்களிலிருந்து வெளியிடப்படும் கரியமில வாயுவையும் நுரையீரலுக்கு எடுத்துச் செல்கின்றன.
- இப்பணியில் உதவுவது இவற்றிலுள்ள ஹீமோகுளோபின் என்ற புரதமாகும்.