ஜேஜே என்று
தமிழ்
தொகுஜேஜே என்று, (உரிச்சொல்).
பொருள்
தொகு- ஆரவாரமிக்க
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- with great noise
- loud
- loudly
விளக்கம்
- பேச்சு வழக்கு...'ஜேஜேன்னு'. என்று பெருந்திரளான மக்கள் கூட்டத்தைக் குறிப்பிட்டு கதை, புதினங்களில் எழுதப்படுகிறது...நாடு அடிமைப்பட்டிருந்த காலத்தில் நீண்ட காலம் மக்கள் பெருந்திரளாக நகர்ப்புறங்களில் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் கூடியதில்லை...கோவில் திருவிழா மற்றும் கிராம சந்தைகளில் மட்டும் சில நூறு என்ணிக்கையில் மக்கள் கூடினர்...பின்னர் சுதந்திரப் போராட்டக் காலத்தில், தேசியத் தலைவர்கள் பேசும் நகர்புறத்துப் பொதுக்கூட்டங்களுக்கு மக்கள் பல ஆயிரக்கணக்கில் திரண்டனர்...அப்போது அந்தப்பெருங்கூட்டம் 'பாரத மாதா கி ஜய்', 'மகாத்மா காந்திக்கு ஜய்' என்று 'ஜய்' போட்டு பலவித கோஷங்களை விண்ணைமுட்டும்படி எழுப்பினர்....இந்த வகையில்தான் தற்போது மக்கள் கூட்டம் எதற்காக எங்கு பெருந்திரளாக சேர்ந்தாலும் 'ஜேஜேன்னு' ஒரே மக்கள் வெள்ளம்/கூட்டம் என்று விவரிக்கும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது...