தாறு மாறு

சொல் பொருள்

தாறு – தாற்று உடையில் கட்டுதல் மாறு – தாற்று உடையை மாற்றி எடுத்துச் சுற்றிக் கட்டுதல்.

விளக்கம்

தட்டுச் சுற்று, வட்டுடை என்பவை மேல் நாள் உடைமுறை. அதன் வழி வந்ததே தாறு கட்டுதல். ‘தாற்றுப் பாய்ச்சுதல்’ என்பதே. சிற்றூர்களில் ‘தாற்பாச்சை’ என இன்றும் வழக்கில் உள்ளது. கீழ்பாச்சி மேலிருந்து கீழும், கீழிருந்து மேலுமாக மாற்றிக் கட்டுதல் போல் எதிரிடையாகச் செய்வதைத் தாறுமாறு என்பதும் பொருந்துவதாம். ‘ தெய்வம் மடிதற்றுத் தான்முந்துறும்’ என்பதில் தற்றுடை வந்தது அறிக.

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாறு_மாறு&oldid=1913138" இலிருந்து மீள்விக்கப்பட்டது