தாள்
தால்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- தாள், பெயர்ச்சொல்.
- காகிதம் - எழுதுவதற்கு அல்லது அச்சிடுவதற்கு அல்லது பை செய்வதற்குப் பயன்படும் மரநார் கொண்டு செய்யப்பட்ட மெல்லிய தட்டையான பொருள்.
- பாதம்; கால்
- கால். எண்குணத்தான் றாளை (குறள், 9).
- மரமுதலியவற்றின் அடிப்பகுதி. விரிதான கயிலாய மலையே (தேவா. 1156, 1).
- பூ முதலியவற்றின் அடித்தண்டு. தாணெடுங் குவளை (சீவக. 2802).
- வைக்கோல்.(பிங்.)
- விளக்குத் தண்டு. (W.)
- படி. குண்டுகண் கழிய குறுந்தாண் ஞாயில் (பதிற்றுப். 71, 12).
- ஆதி. (சூடா.)
- சட்டைக் கயிறு. தாளுண்ட கச்சிற் றகையுண்ட (கம்பரா. பூக்கொய். 14).
- விற்குதை. (W.)
- வால்மீன் விசேடம். குளமீனொடுந் தாட்புகையினும் (புறநா. 395).
- ஒற்றைக் காகிதம். Mod.
- தாழ்ப்பாள். தம்மதி றாந்திறப்பர் தாள் (பு. வெ. 9, 24).
- கொய்யாக்கட்டை.
- முட்டுவாயின் ஊடுருவச் செறிக்கும் கடையாணி. தாளுடைக் கடிகை நுழைநுதி நெடுவேல் (அகநா. 35).
- திறவுகோல். இன்பப் புதாத்திறக்குந் தாளுடைய மூர்த்தி (சீவக. 1549).
- தாடை. தாள் கிட்டிக்கொண்டது.
- கண்டம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- paper
- feet
- (M. tāḷ.) Leg, foot;
- Foot of a tree or mountain;
- (K. tāḻ, M. tāḷ.) Stem, pedicle, stalk;
- Straw;
- Lampstand, candle-stick;
- Stairs;
- Origin, commencement, beginning;
- Tying string of a jacket;
- Ends of a bow;
- A comet;
- (M. tāḷ.) Sheet of paper;
- cf. tāla. (K. tāḻ, M. tāḷ.) Bolt, bar, latch;
- Wooden catch turning on a central screw that fastens a pair of shutters;
- Pin that holds a tenon in a mortise;
- Key;
- cf. tālu. Jaws;
- Adam's apple;
சொல்வளம்
தொகுத
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +