திக்காமல்லி
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
திக்காமல்லி,
பொருள்
தொகு- ஓர் அரிய மூலிகை
Gardenia gummifera (தாவரவியல் பெயர்)
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- a rare indian herb facing extinction
விளக்கம்
தொகு- மறைந்து வரும் ஓர் அரிய மூலிகை...இந்தச் செடியின் பிசினை வெண்ணெயுடன் கூட்டி அரைத்து மூலரணம், மேகரணத்திற்கு தடவினால் விரைவில் ஆறும்...ஈக்கள் இரணத்தை அணுகாது... இதன் வேர் அல்லது பிசினை, மற்ற பொருட்களோடுக் கூட்டி இடித்துப் பொடியாக்கி அதை நல்லெண்ணெயில் 1/2 தோலா போட்டுக்காய்ச்சி வடிகட்டி தலையிலிட்டுக் குளித்தால் தலையிலுள்ள நீரேற்றம், தலைவலி, தலைபாரம், நீர்ப்பீநசம் ஆகியவன போகும்.வேண்டிய மற்ற பொருட்கள் பளிங்கு சாம்பிராணி, கொம்பரக்கு, சந்தனப்பொடி, கஸ்தூரி மஞ்சள், சடாமாஞ்சில், செம்மரத்தூள், எல்லாம் சமனெடை.
( மொழிகள் ) |
சான்றுகள் ---திக்காமல்லி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி