திருவத்தியானம்

நதி/கடற் கரையில் அமாவாசை நாளில் செய்யப்படும் பிண்டதானம் எனப்படும் திருவத்தியானம் (ஓமம் கிடையாது)
ஓமம்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

திருவத்தியானம், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. இறந்தோருக்கு ஆண்டுக்கொருமுறை செய்யும் சடங்கு.

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. annual hindu ritual for the dead

விளக்கம் தொகு

  • புறமொழிச்சொல்...வடமொழி...அம்மொழியில் आध्यान...அத்4-யாந என்றால் துயரம்/வருத்தத்துடன் நினைவு படுத்திக்கொள்வது என்று பொருள்...ஆண்டுக்கொருமுறை வருத்தத்தோடு நினைத்து செய்யும் சடங்காதலால் தமிழ் திரு சேர்ந்து திருவத்தியானம் ஆயிற்று..வைணவ அந்தணர்களின் மொழி...காலமான தாய் அல்லது தந்தைக்காக ஒருவர் ஆண்டுக்கொரு முறை அவர்கள் இறந்த மாதம், பட்சம், திதி வரும் நாளில் செய்யும் சடங்கு...தீ வளர்த்து (ஓமம்), மந்திரங்கள் ஓதி, இறந்தவர்களுக்கு அன்னம், சலம் படைத்து கர்த்தா எனப்படும் இறந்தோரின் மூத்த மகன், தன் சகோதரர்களுடன் சேர்ந்தோ அல்லது அவர்களை தன் இருப்பிடத்திற்கு வரவழைத்தோ செய்யும் சடங்கு... இதையே திவசம் என்பர்...பெண்கள் இந்தச் சடங்கைத் தாமே தீயின்முன் உட்கார்ந்து கர்த்தாவாகச் செய்ய அனுமதி இல்லை...வழக்கொழிந்து வரும் ஒரு சொல்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=திருவத்தியானம்&oldid=1222338" இலிருந்து மீள்விக்கப்பட்டது