தீவிர எச்.ஐ.வி. தொற்று
பொருள்
ஆரம்ப நிலையிலிலுள்ள எச்.ஐ.வி., தொற்று அல்லது தீவிர ரெட்ரோவைரஸ் அறிகுறி தொகுப்பு (ஏ.ஆர்.எஸ். அக்யூட் ரெட்ரோவைரஸ் சின்ட்ரோம்) என்று அழைக்கப்படுகிறது. எச்.ஐ.வி., தொற்று ஏற்பட்ட 2 முதல் 4 வாரங்களில் உடலில் எச்.ஐ.வி. விரைவாக பல்கிப் பெருகுகிறது. ஆரம்ப நிலையில் உள்ள தொற்றின் போது, ரத்தத்தில் சிடி4 செல்களின் எண்ணிக்கை குறையத் தொடங்குகிறது. அதேசமயம், எச்.ஐ.வி. எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்குகிறது. எச்.ஐ.வி. தொற்று பெற்ற சிலருக்கு (எல்லோருக்கும் அல்ல), காய்ச்சல் போன்ற அறிகுறி தென்படும். காய்ச்சல், வீங்கிய நிணநீர் சுரப்பிகள், தொண்டை புண் மற்றும் தோல் சொறி போன்ற நோய் அறிகுறிகளும் காணப்படும். இந்த அறிகுறிகள் சில நாட்களோ அல்லது 4 வாரங்கள் வரையோ நீடித்து பின் மறையும்.