துணிமணி

சொல் பொருள்

துணி – ஆடை அல்லது உடைவகை. மணி – அணிகல வகை.

விளக்கம்

துண்டு, துணி, துணுக்கு என்பவை எல்லாம் ஒரு பொருளன. பாவில் இருந்து துணிக்கப்படுவதால் துணி ஆயிற்றாம். துணி என்பது உடுப்பனவற்றையெல்லாம் தழுவி நின்றது. அது போல மணி என்பது அணிவனவற்றையெல்லாம் தழுவி நின்றது.

மணிவகை ஒன்பது; இக்கால் அவ்வொவ்வொன்றின் போலிமையும், புத்தாக்கமானவையும் எண்ணற்றுள. அவற்றால் அமைக்கப் பெற்ற அணி கலங்கள் எல்லாம் மணி என்னும் சொல்லுள் அடக்கமே. மணவிழாவுக்குத் “துணி மணி” எடுக்காதவர் எவர்?

"https://ta.wiktionary.org/w/index.php?title=துணிமணி&oldid=1913133" இலிருந்து மீள்விக்கப்பட்டது