தூங்கா விளக்கு

தூங்கா விளக்கு
தூங்கா விளக்கு
தூங்கா விளக்கு
தூங்கா விளக்கு

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தூங்கா விளக்கு, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. இராப்பகலாக எரியும் விளக்கு



மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. an oil lamp which is set to burn day and night in pooja places


விளக்கம் தொகு

தூங்காத + விளக்கு = தூங்கா விளக்கு...தனியே பூசை அறைகள்/இடங்கள் உள்ள வீடுகள் மற்றும் சில கோவில்களில் சாமி கருவறைகளில் இரவும் பகலும் எரியும்படியாக எண்ணெய் விளக்குகளை ஏற்பாடு செய்திருப்பர்...சதா எரிந்துக்கொண்டிருப்பதால் தூங்கா விளக்கு ஆயிற்று...சாதாரணமாக வீடுகளில் தரையில் வைத்து இவ்வாறான விளக்குகளை உபயோகித்தாலும் அவைகளை தூங்கா விளக்கு எனமாட்டார்கள்...பலவிதமான வடிவமைப்புகளில், கலைநயம் மிக்கதாய், சிறியவை,பெரியவைகளாக, பித்தளை, வெண்கலம் ஆகிய உலோகங்களினால் உண்டாக்கப்பட்டிருக்கும்...வட்டவடிவமாக இருக்கும் இந்த விளக்குகளின் நடுவில் ஒரு சங்கிலியை இணைத்து தலைக்கு மேல் உத்திரத்தில்/கூரையில் பொருத்திவிடுவர்...ஒன்று அல்லது பல அலகுகளைக் கொண்டதாக/அல்லது அலகுகளே இல்லாமலும் இருக்கும் (திரியிடும் சிறுபள்ளங்கள்)...இதில் எண்ணெய்விட்டு விளக்கை ஏற்றி அணையாமல் கவனித்துக் கொள்வர்...இந்தவகை விளக்குகளை தூக்கு விளக்கு, தொங்கு விளக்கு, சரவிளக்கு என்றும் அழைப்பர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=தூங்கா_விளக்கு&oldid=1216424" இலிருந்து மீள்விக்கப்பட்டது