தூதுளையிலை
(Solanum Trilobatum...(தாவரவியல் பெயர்) ...Leaves
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2a/Solanum_trilobatum.jpg/150px-Solanum_trilobatum.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fa/Thudhuvalai_%28Solanum_trilobatum%29.jpg/150px-Thudhuvalai_%28Solanum_trilobatum%29.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/46/Sol_trilob1.jpg/150px-Sol_trilob1.jpg)
தமிழ்
தொகு
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
தூதுளையிலை, .
பொருள்
தொகு- தூதுளை மூலிகைச்செடியின் இலைகள்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- leaves of a herbal plant called thoothulai in tamil
விளக்கம்
தொகுமருத்துவ குணங்கள்
தொகுதூதுவளையிலை எனப்படும் தூதுளையிலையால் பாதிரியவாதம், சிலேஷ்மகர்ண சூலை, இருமல், நமைச்சல், மதநோய், அக்னிமாந்தம், திரிதோஷம், உட்குத்தல், விந்து நட்டம், மேலுளைப்பு ஆகியப் பிணிகள் விலகும்..
உபயோகிக்கும் முறை
தொகு- இந்த மூலிகையின் சமூலத்தில் ஒரு பிடி கொண்டுவந்து இடித்து, ஒரு மட்குடுவையிலிட்டு அரைப் படி நீர் சேர்த்து வீசம்படியாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி வேளைக்கு ஒன்று முதல் ஒன்றரை அவுன்சு வீதம் சிறிது தேன் கூட்டித் தினம் இரண்டு மூன்று வேளை கொடுக்கச் சீதளத்தினாலுண்டான இருமலைக் குணப்படுத்தும்...
- இந்த இலையைச் சிறிது நெய்விட்டு வதக்கி உப்பு, புளி, காரம் கூட்டித் துவையலாக அரைத்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் தீபனத்தை உண்டாக்குவதுடன் வாயுவையும் கண்டிக்கும்...தூதுளை வேரை வெற்றிலைப் பாக்குடன் தின்றுவர முத்தோஷத்தையும் நீக்கும்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---தூதுளையிலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி