தூபம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
தூபம், .
பொருள்
தொகு- பூசையில் நறுமணப்புகைப் போடுதல்
- கோள் சொல்லுதல்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- aromatic smoke made as a part of worship.
- telling bad about others to a person.
விளக்கம்
தொகு- திசைச்சொல்---வடமொழி...பூசை முறையில் தூப, தீப, நைவேத்தியம் என்பது மூன்று முக்கிய பாகங்கள் ...இதில் தூபம் என்பது அடுப்புக்கரித் துண்டுகளைத் தூபக்காலில் வைத்து எரித்து தணலாக்கி அதில் சாம்பராணிப் பொடியைப்போட்டு நறுமணம் கமழும் புகையை, அதுவே தூபம், உண்டாக்கி, அதைக் கடவுளர் படங்களைச் சுற்றிக் காண்பிப்பர்...கடந்த காலங்களில் வீட்டுப்பெண்களும் தலை நீராடி தலைகளைத் துவட்டியபின் தங்கள் நீண்ட கூந்தலில் ஈரம் விரைவாக நீங்கவும், நீர்க்கோப்பு, தலை பாரம் போன்ற உபத்திரவங்கள் வராமல் இருக்கவும் தூபம் போட்டுக்கொள்வர்...
- பேச்சு வழக்கில் தூபம் போடுதல்என்றால் ஒருவரிடம் மற்றவரைக் குறித்து கோள் சொல்லுவது என்னும் பொருளும் உண்டு.
பயன்பாடு
தொகு- இன்று சீக்கிரமாகவே பூசையை முடித்துக் கொள்ள வேண்டும்...தூபம் போடத் தணல் தயார் செய்து வை...
- கோவிந்தனைப்பற்றி நாராயணன் சீனுவிடம் நன்றாகவே தூபம் போட்டுவிட்டான்...ஆகையால் சீனு இப்போதெல்லாம் கோவிந்தனோடு பேசுவதே இல்லை.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தூபம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி