தோட்டி தொண்டைமான்

தோட்டி தொண்டைமான்

சொல் பொருள்

தோட்டி என்பது யானைப்பாகன் கையில் உள்ள ஒரு வளைகருவி. யானையை இயக்க அக்கருவி பயன்படும். யானைப் பாகர் அதனை வைத்திருப்பதால் தோட்டி வைத்திருப்பவன் ‘தோட்டி’ எனப்பட்டான். தொண்டைமான் என்பவன் ஆளும் அரசன்.

விளக்கம்

தோட்டி என்பது யானைப்பாகன் கையில் உள்ள ஒரு வளைகருவி. யானையை இயக்க அக்கருவி பயன்படும். யானைப் பாகர் அதனை வைத்திருப்பதால் தோட்டி வைத்திருப்பவன் ‘தோட்டி’ எனப்பட்டான். இடையர்கள் இலை, தழை, கொய்ய வைத்திருப்பதும் தோட்டியே; அது தொரட்டி எனவும், வாங்கு (வளைவு) எனவும் வழங்குகிறது. தொண்டைமான் என்பவன் ஆளும் அரசன். அவன் நாடு தொண்டைநாடு. பல்லாபுரம் சென்னை காஞ்சிப் பகுதி. அங்கே தொண்டைமான் என்றும் பெயருடன் ஆட்சி செய்தலால் தொண்டைமான் என்பது அரசன் என்றும் பொருள் பெற்றது. தோட்டி யானைமேல் இருந்து அதனைச் செலுத்துபவன்; தொண்டைமான் அவ் யானைமேல் உலாக் கொள்பவன். இவ்வியல் கருதி அவர்கள் தோட்டி முதல் தொண்டைமான் வரை என்றனர். தோட்டி என்றும் அப்பொருள் மக்கள் வழக்கில் மாறிப் போய்விட்டது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=தோட்டி_தொண்டைமான்&oldid=1913068" இலிருந்து மீள்விக்கப்பட்டது