நடுவண் அரசு

இந்திய நடுவண் அரசின் மக்களவைக் கட்டிடங்கள்--புது தில்லி

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

நடுவண் அரசு, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. மத்திய அரசாங்கம்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. central government

விளக்கம் தொகு

  • நடுவண் + அரசு = நடுவண் அரசு...சுய அதிகாரங்களோடு கூடிய பல அரசுகள் இணைந்து ஒரே குடையின் கீழ் ஒரு கூட்டாட்சியை ஏற்படுத்திக்கொள்ளும்... அந்தக் கூட்டாட்சியின் அரசாங்கத்திற்கு நடுவண் அரசு என்று பெயர்...இந்த அரசே அரசியல் சாசனப்படி தனக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் வரையறைக்குள் தன் நாட்டிற்குள் இருக்கும் மற்ற எல்லா அரசுகளையும் தன் சட்டதிட்டங்கள் மற்றும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும்...முக்கியமாக நாட்டின் பொது விடயங்களான பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு, முப்படைகள், நாணயம் மற்றும் செலாவணி ஆகியவைகள் நடுவண் அரசின் முழு அதிகாரத்தின் கீழ் வரும்... நடுவண் அரசுகள் உள்ள நாடுகள் எ.கா... இந்திய ஒன்றியம், அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=நடுவண்_அரசு&oldid=1912082" இலிருந்து மீள்விக்கப்பட்டது