நரமுக விநாயகர்

வினாயகர் பர்வதியால் உருவாக்கப்பட்டபோது இந்த யானை முகம் கொண்டவரல்ல..மனித முகம்தான்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

நரமுக விநாயகர், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. மனிதமுகத்துப் பிள்ளையார்.

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. lord Ganesh, a hindu god, as having a human face (Not with usual elephant face)

விளக்கம் தொகு

  • பார்வதியால் உருவாக்கப்பட்டபோது பிள்ளையாருக்கு மனிதமுகம்தான்...பின்னர்தான் சிவபிரானால் மனிதத்தலை கொய்யப்பட்டு யானைத்தலை ஏற்பட்டது...ஆகவே முதன்முதலில் உருவான பிள்ளையார் ஆதிவிநாயகர் அல்லது நரமுக விநாயகர் எனப்பட்டார்...வடமொழியில் நரன் என்றால் மனிதன் என்பதாகும்.
  • தமிழ் நாடு, திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில்( திருவாரூரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவு) அமைந்துள்ள திலதர்ப்பணப்புரியிலுள்ள சிவாலயத்தில் தனிச்சந்நிதியில் மேற்கு நோக்கி தும்பிக்கையின்றி மனிதமுக விநாயகர் தரிசனம் தருகிறார். இங்கு நரமுக விநாயகர் மனித உருவத்தோடு பாசம், அங்குசம், அபயஹஸ்தமாக ஆனந்த முத்திரையுடன் கூடிய கைகளோடு, இடதுகையை இடது காலின்மீது வைத்தபடி காட்சி அளிக்கிறார்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=நரமுக_விநாயகர்&oldid=1223416" இலிருந்து மீள்விக்கப்பட்டது