பகுப்பு பேச்சு:ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள்

தமிழக அரசின் கொடை

தொகு
 
ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள்:
தமிழிணைய மாநாட்டு அரங்கம்-2010
 
ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள்:
தமிழிணைய மாநாட்டுக் கொடை நிகழ்வு

தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூரில் 2010 ஆம் ஆண்டு சூன் மாதம் செம்மொழி மாநாடு நடைபெற்றது. அத்துடன் இணைத்து நடைபெற்ற தமிழிணைய மாநாட்டில், தமிழக அரசால் தமிழ் விக்சனரிக்கு சொற்கள் கொடையளிக்கப் பட்டன. இச்சொற்களை தமிழக அரசுக்காகத் தொகுத்தவர்கள் தமிழிணையக் கல்விக் கழக குழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழிணையக் கல்விக் கழகமென்பது தமிழக அரசால் நிறுவப்பெற்ற தன்னாட்சி நிறுவனமாகும்.

அக்கொடையை தமிழ் விக்சனரி சார்பாக பெற்றுக்கொள்ள பேராசிரியர் செ.இரா.செல்வக்குமாரை அழைத்த பொழுது அங்கு அவர் இல்லாததால், அவருக்குப் பதிலாக படத்தில் அமைச்சரிடமிருந்து பெறுபவர், மயூரனும், மாகிரும் ஆவர்.

இப்பகுப்பில் அச்சொற்கள் மட்டும் உள்ளன. பிற சொற்களை இதில் சேர்க்க வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.--த*உழவன் 06:11, 25 ஆகஸ்ட் 2010 (UTC)


வார்ப்புரு பேச்சு:தமிழிணைய மாநாடு 2010 என்பதனையும் காண்க.

தமிழ்நாடு அரசு ... இசைந்துள்ளது

தொகு
  • .............இப்பகுப்பிலுள்ளவற்றை த.இ.க.க.கொடை என, ஒரே பெயராக மாற்றவேண்டும்.......

இப்பகுப்பினை மறைக்க வேண்டாம்

தொகு

@Balajijagadesh: மேலாண்மைக்காக மறைத்தல் பொதுவாக நாம் விக்கியில் பின்பற்றும் நடைமுறைதான். ஆனால், தமிழ்நாடு அரசு துறையினரோ, பிறரோ நேரடியாக இப்பகுப்பினைக் குறித்து அறிதல் அவசியமாகும். மறைமுகபகுப்பினை அறியும் நுட்பம் அவர்களுக்குத் தெரியாது. இதற்கு முன் பரப்புரையில் இது குறித்து ஏற்கனவே அறிவித்துள்ளோம். அதாவது எந்த த. இ. ப சொற்களின் கீழும் பகுப்பு தெரியும் என்று சொல்லி இருக்கிறோம். எனவே முன்னிலை படுத்துங்கள். தெரிவதால் கேடு ஒன்றும் இல்லை என்றே எண்ணுகிறேன்.--உழவன் (உரை) 23:16, 8 சனவரி 2022 (UTC)Reply

மேலாண்மை பகுப்புகளை மறைத்தலே நடைமுறை. அதனால் பகுப்பை மறைப்பது சரியே. //மறைமுகபகுப்பினை அறியும் நுட்பம் அவர்களுக்குத் தெரியாது.// தெரியாத்தை சொல்லிக்கொடுப்போம். அதுவே விக்கி மரபு. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 23:34, 8 சனவரி 2022 (UTC)Reply
Return to "ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள்" page.