பகுப்பு பேச்சு:சமற்கிருதம் மொழி தொடர்புடைய மோன் மொழி சொற்கள்

மோன் என்றால் என்ன?

தொகு

மோன் என்ற சொல்லுக்கு விளக்கம் தருக. புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். உழவன் (உரை) 03:01, 18 அக்டோபர் 2023 (UTC)Reply

@Info-farmer மோன் Sriveenkat (💬) 05:42, 18 அக்டோபர் 2023 (UTC)Reply
நன்றி. ஆனால் சமஸ்கிருத மொழியிலிருந்து பெற்றவை என்பதை விட, சமற்கிருத மொழியில் இருக்கும் மோன் சொற்கள் என அமைத்தல் நலம். ஏனெனில் ஒரு மொழியின் தோற்றத்தினை யாராலும் உறுதியாக கூறுதல் இயலாது. ஒரு மொழியை, அன்றாட வாழ்வில், யாவருக்கும் பயன்படும் படி செய்தலே முக்கியம், என்றே எண்ணுகிறேன். உழவன் (உரை) 02:40, 19 அக்டோபர் 2023 (UTC)Reply
உங்கள் கருத்துக்களில் நான் சிலவற்றை ஏற்கிறேன். "ஒரு மொழியின் தோற்றத்தினை யாராலும் உறுதியாக கூறுதல் இயலாது" ஆம் நாம் எதையும் உறுதியாக கூற இயலாது. இது ஒரு யூகத்தை உருவாக்க உதவும். நீங்கள் கூறும் பகுப்பு பெயர் சற்று எனக்கு குழப்பத்தை ஏற்படுகிறது, சமற்கிருத மொழியில் இருக்கும் மோன் சொற்கள் என்பது Mon words in Sanskrit போன்று பொருள் தருவதாக எனக்கு தோன்றுகிறது. ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளை அப்படியே அனுமதிக்காது என்று நான் நம்புகிறேன். நீங்கள் கூறும் பகுப்பு பெயரிடல் அப்படியே அனுமதிப்பது போன்ற ஒரு தோற்றத்தை அழிப்பதால் எனக்கு தோன்றுகிறது. எனது கருத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னியுங்கள் நன்றி Sriveenkat (💬) 18:56, 19 அக்டோபர் 2023 (UTC)Reply
//மன்னியுங்கள்// என்பது வேண்டாம். நாம் எண்ணங்களை வெளிப்படுத்துகிறோம். அவ்வளவே. யூகத்தின் அடிப்படையில் பெயர் வைப்பது சரியன்று. பொருத்தமான தலைப்பைக் கூறுங்கள். பிறரிடமும் கேட்போம். உழவன் (உரை) 01:11, 20 அக்டோபர் 2023 (UTC)Reply
@Info-farmer இது en:Category:Mon terms derived from Sanskrit என்பதனின் மொழிபெயர்ப்புதான். இது லூல (Lua) மூலம் இயங்குகிறது. உதாரணம்: {.{bor|mnw|sa|पनस}} mnw - மோன் , sa - சமஸ்கிருதம். இதில் குறிப்பிட்ட வார்ப்புருவை இட்டால் மட்டுமே போதும். தானாகவே பகுப்புகள் தோன்றும். இதை வேறு மாதிரி எப்படி எனக்கு மொழிபெயர்ப்பது என்று தெரியவில்லை. இதை சமூகத்தாரிடம் கொண்டு செல்வோம். அதற்கு சில நிபந்தனைகள் உள்ளது இல்லையெனில் Lua மாற்றம் செய்ய வேண்டி இருக்கும் அதை பிறரை செய்ய வேண்டும். ஏனெனில் எனக்கு அந்த அளவிற்கு தெரியாது. பெரும்பாலான Module களை உருவாக்கியவர் இந்தோபேசா (Intobesa - பயனர்:咽頭べさ). ஒரு நாள் இது குறித்து விரிவாக உரையாடலாம் நன்றி Sriveenkat (💬) 19:24, 20 அக்டோபர் 2023 (UTC)Reply
எந்த Lua Module மூலம் இயங்குகிறது. இதனால் தமிழ் மொழிக்கு என்ன நன்மை என அறிய ஆவல். ஓரளவு இம்மொழியை புரிந்து கொள்ள இயலும். பகுப்பின் பெயரை மாற்றுவதால் இயங்காது என்பது பொருத்தமல்ல. en:Category:Mon terms derived from Sanskrit தவறுதான். அதனை நாம் பின்பற்ற வேண்டியது அல்ல. ஏற்கனவே சொன்னபடி, ஒலிக்குறிப்பை வைத்துக் கொண்டு, ஒரு மொழியில் இருந்து வந்தது என்பது தவறு. எல்லாவற்றிற்கும் மேலாக விக்கியில் நடுநிலைமை பின்பற்ற வேண்டும். இது ஆய்வு களமல்ல.
en:w:Wikipedia:No original research/Noticeboard மேலும், சங்கதம், சமற்கிருதம் என்று கிரந்தம் தவிர்த்து எழுதுதல் தமிழ் விக்கிமீடியாவின் வழக்கங்களில் ஒன்று. நான்கைந்து சொற்களுக்காக மேலும் இது குறித்து எனது நேரத்தினை செலவிட விரும்பவில்லை. ஏனெனில் ஏற்கனவே சொன்னது போல விக்கிமீடியா ஆய்வு களமல்ல. விரைவில் இப்பகுப்பு சமற்கிருத மொழி தொடர்புடைய மோன் சொற்கள் என மாற்றப்படும். மாற்றக்கூடாது எனில் பிறரிடம் கல்ந்துரையாடுவோம்
. உழவன் (உரை) 00:56, 21 அக்டோபர் 2023 (UTC)Reply
பகுப்பு:சமற்கிருதம் மொழி தொடர்புடைய மோன் மொழி சொற்கள் Sriveenkat (💬) 11:27, 21 அக்டோபர் 2023 (UTC)Reply
நீங்கள் கூறுவதை நான் ஒப்புக்கொள்கிறேன். நீங்கள் கூறியதைப் போன்று பகுப்பு பெயரை மாற்றியுள்ளேன். நம்மளால் சமஸ்கிருத மொழி தொடர்புடைய முன் சொற்கள் என்று மாற்ற இயலாது. மொழிபெயர் தரவை Module:languages/data2 மூலம் இயங்குகிறது. பகுப்பு தரவு எல்லாம் Module:etymology மூலம் இயங்குகிறது. சமற்கிருத என்பதை சமற்கிருதம் என்று மாற்றி இருப்பதை நீங்கள் காணலாம். நீங்கள் இந்த பகுப்பே தேவையற்றது என்று நீங்கள் எண்ணினால் இந்த பகுப்பை நீக்கிவிடுவும். நான் Module-லும் நீக்கி விடுகிறேன். Sriveenkat (💬) 11:36, 21 அக்டோபர் 2023 (UTC)Reply
எதையும் நீக்கும் நோக்கம் எனக்கில்லை. நடுநிலையோடு நாம் செயல்பட வேண்டும் என்பதே நோக்கம். பொதுவாக விக்கிமீடியாவின் தரவுகளை மூன்றாம் தர சான்றுகளுற்ற தரவுகளாகத் தான் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் விக்கியினங்கள் திட்டத்தினையும், ஒப்பீடு செய்ய விக்கித்தரவு உதவுவாதல் அதனையும், ஆய்வாளர்கள் தங்களது சான்றுகளில் இணைத்து கொள்கின்றனர். இது தமிழ் மொழிக்கான திட்டப்பகுதி. எனவே தமிழ் மொழிக்கான நுட்பங்களை திட்டமாக செய்யக் கோருகிறேன். சமற்கிருத மொழியில் செயற்படும் நண்பர் நெகல் தேவ் உடன் இணைந்து s:அட்டவணை பேச்சு:ஸம்ஸ்க்ருத தமிழ் அகராதி வெங்கடேச சர்மா.pdf என்ற சமற்கிருதம் - தமிழ் மொழி அகரமுதலியை உருவாக்க எண்ணுகிறேன். இருப்பினும் தமிழ் சார்ந்து நிறைய கற்க முனைவதால் நேர மேலாண்மையில் சறுக்குகிறேன். உங்களுக்கு விருப்பம் எனில் இந்த அகரமுதலியை கையில் எடுங்கள் என கேட்டுக் கொள்கிறேன். உழவன் (உரை) 02:37, 22 அக்டோபர் 2023 (UTC)Reply
சரி, தற்போதைய நிலையில் என்னால் விக்கிமூலத்திற்கு வர இயலாது. ஒரு 15 நாட்கள் கழித்து முயற்சிக்கிறேன். நாம் அனைத்து மொழிகளுடனும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆதலால் நீங்கள் விக்கியில் சமற்கிருதம் தமிழ் அகராதி குறித்து உரையாடும்போது நான் அதில் கலந்து கொள்ள விரும்புகிறேன். தமிழ் மொழிக்காக பல நுட்பங்களை நாம் தமிழ் திட்டங்களில் கொண்டு வர முயன்று பல பயனர்கள் வருகின்றனர். எனக்குத் தெரிந்து அதிகம் தமிழ் விக்சனரியில் என்னும் மோன் மொழியை தாய்மொழியாக கொண்ட பயனர் ஒருவர் செய்து வருகிறார். இவர் தமிழ் மொழியை அடிப்படை நிலையில் புரிந்து கொள்கிறார். இவருடன் இணைந்து தற்போது நுட்பரீதியில் நான் செயல்பட்டு வருகிறேன். உங்களுக்கும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவரிடம் நீங்கள் கேட்கலாம். ஒரு சோதனை முயற்சியாக Module:மொழி என்பதை உருவாக்கியுள்ளேன். தமிழ் மாற்றாக இது சோதனை முயற்சியாக உருவாக்கியுள்ளேன். எ-கா: சமஸ்கிருதம் என்று இட்டால் சமஸ்கிருதம் என்று தோன்றும். கிரந்த எழுத்துக்கள் தவிர்ப்பது தமிழ் விக்கிமீடியா வழக்கமாக இருப்பதால் அவைகள் தவிர்க்கப்படுகின்றன. ja என்று இட்டால் என்றும் ஜப்பானியம் ko என்று கொரியன் என்றும் தோன்றுகின்றன. இது வெறும் தமிங்கலமே (Tanglish). இது போன்ற பல காரணங்களுக்காக உருவாக்கியுள்ளேன். இது முழுமையாக மொழிகளை சேர்த்த பின்பு {.{மொழி, பெயர்ச்சொல்-பகுப்பு}} இதை இணைக்கலாம். வங்காளத்தில் (bnwikt) இந்த நுட்பத்தினை பின்பற்றுகின்றனர். சமஸ்கிருதம் போன்ற கிரந்த எழுத்துக்களை தவிர்க்கலாம். Mon என்று நாம் இட்டால் அது தமிழில் தோன்றுவதில்லை ஆங்கிலத்திலே தோன்றுகின்றன இது போன்றவற்றையும் தவிர்க்கலாம். தங்களுக்கு நேரம் இருக்கும்போது நீங்களும் Module-ல் மொழிகளை இணையுங்கள் Sriveenkat (💬) 07:26, 22 அக்டோபர் 2023 (UTC)Reply
Return to "சமற்கிருதம் மொழி தொடர்புடைய மோன் மொழி சொற்கள்" page.