பக்கப்பாட்டுப்பாடுதல்

பக்கப்பாட்டுப்பாடுதல்

சொல் பொருள் விளக்கம்

இருவர் இணைந்து பாடினாலும் பலர் இணைந்து பாடினாலும் ஒருவர் பாடியதாகவே ஆகும். ஆனால், பக்கப்பாட்டு என்பது அவர்கள் பாட்டுக்குப் பின்பாட்டுப் பாடுவதாம். பின்பாட்டுப்பாடுதல் என்பது காண்க. ஒருவர் ஒரு கருத்தைச் சொல்லும்போது அவர்க்குத் தொடர்புடைய ஒருவர், தொடர்பிலாதவர்போல வந்து நின்று அவர் கூறிய கருத்தை அழுத்தமாக வரவேற்பார்; சான்றும் காட்டுவார். அதனால் அதனைக் கேட்பவர் ஒப்புக்கொள்ள நேர்ந்துவிடும். இதனைப் பக்கப்பாட்டுப் பாடுதல் என்பதும் வழக்கே.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பக்கப்பாட்டுப்பாடுதல்&oldid=1913012" இலிருந்து மீள்விக்கப்பட்டது