பயனர்:புனிதா வீர்காத்/மணல்தொட்டி

புனிதா வீர்காத் 11 hours ago சாக்கலூத்து மெட்டு சாலை: செவிடன் காதில் ஊதிய சங்கு.. – புனிதா வீர்காத்.

....................இன்னும்....,இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத் தான் ஒரு மலைப்பாதை சாலைக்காக (அதிகமில்லை.வெறும் 5 கி.மீ. நீளம் தான்) மக்கள் கோரிக்கை வைப்பது..போராட்டம் நடத்துவது...?

தேவாரம் சாக்கலூத்து மெட்டுச்சாலை: தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகாவில் மேற்குத்தொடர்ச்சி மலையாடிவாரத்தில் அமைந்துள்ளது தேவாரம். இவ்வூருக்கு தெற்கே தே.மேட்டுப்பட்டி, தே.மீனாட்சிபுரம், மல்லிங்காபுரம், பண்ணைப்புரம், கரியனம்பட்டி , கோம்பை, தென்கிழக்கில் பல்லவராயன்பட்டி, மேலச்சிந்தலைசேரி, கீழசிந்தலைசேரி, புலிகுத்தி, கோயில்சிந்தலைசேரி, பொம்மிநாயக்கன்பட்டி , கிழக்கு முகமாக சங்கராபுரம் , லட்சுமிநாயக்கன்பட்டி, வடக்கே மூணாண்டிபட்டி, தே.ரங்கநாதபுரம், தம்மி நாயக்கன்பட்டி, திம்மிநாயக்கன்பட்டி, பொட்டிபுரம் என்று சுமார் இருபத்து ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தான் இந்த 5 கிலோ மீட்டர் மலைச்சாலை பாதைக்காக 3 தலைமுறையாக போராடி வருகின்றனர். போடிநாயக்கனூர் – உத்தமபாளையம் மாநில நெடுஞ்சாலையில் தேவாரத்தை அடுத்து உள்ள தே.மேட்டுப்பட்டியில் இருந்து மீனாட்சிபுரம் வழியாக மேற்குதொடர்ச்சி மலை, சக்கனகுண்டு என்ற இடத்தில் இருந்து துவங்குகிறது சாக்கலூத்து மெட்டு மலைச்சாலை.( தேவாரம் ஐயப்பன் கோவில் சிற்றோடை, சாக்கலூத்து பெரிய ஓடை, மீனாட்சிபுரம் வழியாகவும் ஒரு தார்சாலை உள்ளது)

மீனாட்சிபுரம் மலையடிவாரம் சக்கனகுண்டு-ல் இருந்து கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை வெறும் 5 கிலோமீட்டர் தூரத்தில் இணைக்கிறது இந்த சாக்கலூத்து மெட்டு மலைச்சாலை. தேவாரம் உட்கடை கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு கேராளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தேயிலை, காபி மற்றும் ஏலத் தோட்டங்கள் உள்ளன. முக்கியமாக ஏலக்காய் தோட்டங்களே அதிகம். இவர்கள் தங்களது தோட்டங்களுக்கு செல்லவும், ஏலத் தோட்டங்களில் வேலைக்காக கூலியாட்களை அழைத்து செல்லவும் இந்த சாக்கலூத்து மெட்டு சாலையைத் தான் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வருகின்றனர்.

தேவாரத்திலிருந்து இடுக்கி மாவட்டத்திற்கு சுமார் நாற்பது நிமிடத்தில் சாக்கலூத்து மெட்டு மலைச்சாலை வழியாக சென்று விடலாம். ஆனால், 5 கிலோ மீட்டர் நீளமே உள்ள இந்த மலைசாலை திட்டம் வனத்துறையின் (முகாந்திரமே இல்லாது சொல்லப்படும், சாக்கலூத்து மெட்டு மலைச்சாலைக்கு பொருந்தாத) செல்லரித்துப் போன சட்டத்தால் ஆண்டாண்டு காலமாக கிடப்பில் கிடக்கிறது. இதனால் இடுக்கி மாவட்டத்திற்கு செல்லும் தமிழத்தை சேர்ந்த தோட்டத்தொழிலாளர்கள், சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள், என அத்தனைபேரும் போடி மெட்டு, கம்பம் மெட்டு, அல்லது குமுளி வழியாக சுமார் 3 மணியில் இருந்து 5 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. நேரம் இழப்பு, பொருளாதார விரயம், மருத்துவ தேவைக்காக அலைக்கழிப்பு என்று அத்துணை விஷயங்களும் இம்மக்களுக்கு தினமும் துயரம் தான்.....

........கைக்கு கிட்டியும் வாய்க்கு எட்டாமலும்......! இந்த துயரமான நிலை இன்று வரை தொடர்ந்தாலும் 1981 மே 25 வாக்கில் இந்த மலைச்சாலை திட்டத்திற்கு அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அனுமதி அளித்து, நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ப.குழந்தைவேலு தலைமையில் தே.மேட்டுப்பட்டியில் அடிக்கல் நாட்டப்பட்டு, சக்கனகுண்டு வரை தார் சாலையும் போடப்பட்டது. அதற்கடுத்தது வரும் வனப்பகுதியில் சாலை அமைக்க வனத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து கிடப்பில் போடப்பட்டது இச்சாலை திட்டம். இவ்வனப்பகுதியின் வழியாக சாலை அமைத்தால் அரிய வகை வன விலங்குகளும், அரிய வகை மரங்களும் பாதிக்கப்படும் என்பது வனத்துறையின் வாதம்............... இந்த வாதம் சரியா? என்றால் இல்லவே இல்லை..., இது வனத்துறையின் விதண்டா வாதம் என்பதே மிகச் சரி.

பிரிட்டிஷ்காரன் போட்ட துருப்பிடித்து, இற்றுப்போன வனச்சட்டம். அதனையே வைத்துக்கொண்டு, மேற்கோள் காட்டிக்கொண்டு மக்களை அனுதினமும் துயரப்பட வைக்கும் அந்தச்சட்டம் அவசியமா என்ன.? அதனை திருத்தி, பூகோள ரீதியாக ஆராய்ந்து எந்தெந்த வனங்களில் இன்னும்,இன்றும் எவ்வித வனவிலங்குகள் உயிர் வாழ்கின்றன..? எவ்வகை மரங்கள் உயிர் வாழ்வதற்கும், மரங்களை வளர்பதற்கும் ஏற்ற வனங்களாக தகுதி பெறுகின்றன என்று எந்த காட்டிலாக அதிகாரி அரசுக்கு அறிக்கை கொடுத்திருக்கிறார்..? வனத்தை பாதுகாப்பதும், வன விலங்குகளை சமுக விரோதிகளிடமிருந்து பாதுகாக்கும் கடமையை வனத்துறையினரை விட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் செவ்வனே செய்து வருகின்றனர் என்பதே நிகழ்கால உண்மை.

வனத்தையு, வன விலங்குகளையும் இப்போதைக்கு இவர்களிடமிருந்து காப்பாற்றினால் தேவலை என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ள நிலையில், சாக்கலூத்து மெட்டு வனச்சாலை பகுதியில் கரட்டான், மரப்பல்லி தவிர எவ்வித வன உயிரினங்களும் இல்லை என்பதையும் , பொத்தக்கள்ளி வகைச்சார்ந்த மரங்கள் தவிர வேறு எந்த அரிய வகை மரங்கள் உள்ளன என்பதையும் வனத்துறையே ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். (இவர்களுக்கு இதை விட என்ன வேலை..!)

......இதற்கிடையில், வனத்துறையால் முட்டுக்கட்டை போடப்பட்டு ஒற்றையடி வழிப்பாதையாக சுருங்கிப்போன வழித்தடத்தை இரு சக்கரம் மற்றும் ஜீப் போன்ற வாகனங்கள் சென்று வரும் அளவிற்கு தாங்களே முன் வந்து இரண்டாயிரமாவது ஆண்டு வாக்கில் தேவாரம் பகுதி வாழ் மக்கள் சாலையை சீரமைத்தனர். ஆனால் அதுவும் சில மாதங்கள் மட்டுமே பயன் பாட்டில் இருந்தது. மீண்டும் வனத்துறை கெடுபிடி செய்து இம்மலைப்பாதை முடக்கப்பட்டு விட்டது.

பின்னர், இரண்டு ஆண்டுகள் கழித்து இப்பகுதி மக்களின் ஓயாத போராட்டம், கோரிக்கையை தொடர்ந்து தமிழக வனத்துறை மதுரை மண்டல வனப்பாதுகாவலர் பாரதி, தேனி டி.எப்.ஓ கணேசன் அடங்கிய அதிகாரிகள் கொண்ட குழுவினர் மலைச்சாலை வழியாக நடந்து சென்று ஆய்வு செய்தனர். அதனையே அரசுக்கு அறிக்கையாகவும் தந்தனர். தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறையும் ரூ.4.5 கோடியில் திட்டம் தயாரித்து அரசிடம் வழங்கியது. அரசும் அனுமதி அளித்தது. சக்கனக்குண்டு வனப்பகுதியில் சாலைபோட வனத்துறையின் அனுமதிக்காக முதன்மை, தலைமை வனப்பாதுகாவலருக்கு நெடுஞ்சாலைத்துறை அனுப்பிய கடிதத்திற்கு பல ஆண்டுகளாக பதில் கிடைக்காமல், மத்திய அரசுக்கு தமிழக அரசு வைக்கும் கோரிக்கையை ஆராய்ந்து அதனை செயல்படுத்தவும், 5 கிலோ மீட்டர் மலைச்சாலை திட்டத்தை நிறைவேற்றவும் இனி எத்தினியாவது தலைமுறை வந்து போராட வேண்டும்...?

மத்திய அரசுக்கு ஒரு சட்டம். மாநில அரசுக்கு ஒரு சட்டமா...? பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் சக்தியாக, இந்த தேசத்தின் பொருளாதாரத்திலும் முக்கிய பாங்காற்றக் கூடியதாகவும் விளங்கும் சாக்கலூத்து மெட்டு – கேரளா இனைப்புச்சாலையை அமைக்க இல்லாத வன விலங்குகள், மரங்களை காரணம் காட்டும் மத்திய அரசு, இதே தேவாரம் பொட்டிப்புரம் அருகில் மலையை குடைந்து ஆயிரத்து முன்னூறு கோடியை ஒதுக்கி, பூமிக்கு அடியில் நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தை அமைக்கும்போது, அங்கு வன வனவிலங்குகள், அரிய வகை மரங்கள் உயிர் வாழவில்லையா...? அவைகளுக்கு எவ்விதத்தில், எவ்வாறான பாதுகாப்பை மத்திய அரசின் வன இலாக்கா வழங்கியுள்ளது...?

டெல்லியில் குளுகுளு அறையில் உட்கார்ந்துகொண்டும், குழுக்கூட்டங்களை நடத்தியும், சாட்டிலைட் மூலம் வனப்பகுதிகளை பார்த்துக்கொண்டு அறிக்கைகள் தயாரிக்கும் உயர் அதிகாரிகாரிகள் இங்கு வந்து தேவாரத்திலோ, அல்லது பொட்டிப்புரத்திலோ தங்கியிருந்து மேற்குத்தொடர்ச்சி மலையை ஆய்வு செய்வார்களா....? முழுக்க முழுக்க வனம் சார்ந்த மாநிலமான கேரளா, தமிழகத்தை இணைக்கும் ஒவ்வொரு இணைப்பு சாலையையும் அதன் எல்கை வரை போட்டு விட்ட பிறகு தமிழத்திற்குமட்டும் என்ன ஓர வஞ்சனை.... Photo: சாக்கலூத்து மெட்டு சாலை: செவிடன் காதில் ஊதிய சங்கு.. – புனிதா வீர்காத்.

....................இன்னும்....,இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத் தான் ஒரு மலைப்பாதை சாலைக்காக (அதிகமில்லை.வெறும் 5 கி.மீ. நீளம் தான்) மக்கள் கோரிக்கை வைப்பது..போராட்டம் நடத்துவது...?

        தேவாரம் சாக்கலூத்து மெட்டுச்சாலை:

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகாவில் மேற்குத்தொடர்ச்சி மலையாடிவாரத்தில் அமைந்துள்ளது தேவாரம். இவ்வூருக்கு தெற்கே தே.மேட்டுப்பட்டி, தே.மீனாட்சிபுரம், மல்லிங்காபுரம், பண்ணைப்புரம், கரியனம்பட்டி , கோம்பை, தென்கிழக்கில் பல்லவராயன்பட்டி, மேலச்சிந்தலைசேரி, கீழசிந்தலைசேரி, புலிகுத்தி, கோயில்சிந்தலைசேரி, பொம்மிநாயக்கன்பட்டி , கிழக்கு முகமாக சங்கராபுரம் , லட்சுமிநாயக்கன்பட்டி, வடக்கே மூணாண்டிபட்டி, தே.ரங்கநாதபுரம், தம்மி நாயக்கன்பட்டி, திம்மிநாயக்கன்பட்டி, பொட்டிபுரம் என்று சுமார் இருபத்து ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

     இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தான் இந்த 5 கிலோ மீட்டர் மலைச்சாலை பாதைக்காக 3 தலைமுறையாக போராடி வருகின்றனர். போடிநாயக்கனூர் – உத்தமபாளையம் மாநில நெடுஞ்சாலையில் தேவாரத்தை அடுத்து உள்ள தே.மேட்டுப்பட்டியில் இருந்து மீனாட்சிபுரம் வழியாக மேற்குதொடர்ச்சி மலை, சக்கனகுண்டு என்ற இடத்தில் இருந்து துவங்குகிறது சாக்கலூத்து மெட்டு மலைச்சாலை.( தேவாரம் ஐயப்பன் கோவில் சிற்றோடை, சாக்கலூத்து பெரிய ஓடை, மீனாட்சிபுரம் வழியாகவும் ஒரு தார்சாலை உள்ளது)
    மீனாட்சிபுரம் மலையடிவாரம் சக்கனகுண்டு-ல் இருந்து கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை வெறும் 5 கிலோமீட்டர் தூரத்தில் இணைக்கிறது இந்த சாக்கலூத்து மெட்டு மலைச்சாலை.
    தேவாரம் உட்கடை கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு கேராளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தேயிலை, காபி மற்றும் ஏலத்  தோட்டங்கள் உள்ளன. முக்கியமாக ஏலக்காய் தோட்டங்களே அதிகம். இவர்கள் தங்களது தோட்டங்களுக்கு செல்லவும், ஏலத் தோட்டங்களில் வேலைக்காக கூலியாட்களை அழைத்து செல்லவும் இந்த சாக்கலூத்து மெட்டு சாலையைத் தான் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வருகின்றனர்.

தேவாரத்திலிருந்து இடுக்கி மாவட்டத்திற்கு சுமார் நாற்பது நிமிடத்தில் சாக்கலூத்து மெட்டு மலைச்சாலை வழியாக சென்று விடலாம். ஆனால், 5 கிலோ மீட்டர் நீளமே உள்ள இந்த மலைசாலை திட்டம் வனத்துறையின் (முகாந்திரமே இல்லாது சொல்லப்படும், சாக்கலூத்து மெட்டு மலைச்சாலைக்கு பொருந்தாத) செல்லரித்துப் போன சட்டத்தால் ஆண்டாண்டு காலமாக கிடப்பில் கிடக்கிறது. இதனால் இடுக்கி மாவட்டத்திற்கு செல்லும் தமிழத்தை சேர்ந்த தோட்டத்தொழிலாளர்கள், சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள், என அத்தனைபேரும் போடி மெட்டு, கம்பம் மெட்டு, அல்லது குமுளி வழியாக சுமார் 3 மணியில் இருந்து 5 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. நேரம் இழப்பு, பொருளாதார விரயம், மருத்துவ தேவைக்காக அலைக்கழிப்பு என்று அத்துணை விஷயங்களும் இம்மக்களுக்கு தினமும் துயரம் தான்.....

........கைக்கு கிட்டியும் வாய்க்கு எட்டாமலும்......!

    இந்த துயரமான நிலை இன்று வரை தொடர்ந்தாலும் 1981  மே 25 வாக்கில் இந்த மலைச்சாலை திட்டத்திற்கு அப்போதைய தமிழக முதல்வர்  எம்.ஜி.ஆர் அனுமதி அளித்து, நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ப.குழந்தைவேலு தலைமையில் தே.மேட்டுப்பட்டியில் அடிக்கல் நாட்டப்பட்டு, சக்கனகுண்டு வரை தார் சாலையும் போடப்பட்டது. அதற்கடுத்தது வரும் வனப்பகுதியில் சாலை அமைக்க வனத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து கிடப்பில் போடப்பட்டது இச்சாலை திட்டம். இவ்வனப்பகுதியின் வழியாக சாலை அமைத்தால் அரிய வகை வன விலங்குகளும், அரிய வகை மரங்களும் பாதிக்கப்படும் என்பது வனத்துறையின் வாதம்............... இந்த வாதம் சரியா? என்றால் இல்லவே இல்லை..., இது வனத்துறையின் விதண்டா வாதம் என்பதே மிகச் சரி.
  பிரிட்டிஷ்காரன் போட்ட துருப்பிடித்து, இற்றுப்போன வனச்சட்டம். அதனையே வைத்துக்கொண்டு, மேற்கோள் காட்டிக்கொண்டு மக்களை அனுதினமும் துயரப்பட  வைக்கும் அந்தச்சட்டம் அவசியமா என்ன.? அதனை திருத்தி, பூகோள ரீதியாக ஆராய்ந்து எந்தெந்த வனங்களில் இன்னும்,இன்றும் எவ்வித வனவிலங்குகள் உயிர் வாழ்கின்றன..? எவ்வகை மரங்கள் உயிர் வாழ்வதற்கும், மரங்களை வளர்பதற்கும் ஏற்ற வனங்களாக தகுதி பெறுகின்றன என்று எந்த காட்டிலாக அதிகாரி அரசுக்கு அறிக்கை கொடுத்திருக்கிறார்..? 
  வனத்தை பாதுகாப்பதும், வன விலங்குகளை சமுக விரோதிகளிடமிருந்து பாதுகாக்கும் கடமையை வனத்துறையினரை விட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் செவ்வனே செய்து வருகின்றனர் என்பதே நிகழ்கால உண்மை. 

வனத்தையு, வன விலங்குகளையும் இப்போதைக்கு இவர்களிடமிருந்து காப்பாற்றினால் தேவலை என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ள நிலையில், சாக்கலூத்து மெட்டு வனச்சாலை பகுதியில் கரட்டான், மரப்பல்லி தவிர எவ்வித வன உயிரினங்களும் இல்லை என்பதையும் , பொத்தக்கள்ளி வகைச்சார்ந்த மரங்கள் தவிர வேறு எந்த அரிய வகை மரங்கள் உள்ளன என்பதையும் வனத்துறையே ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். (இவர்களுக்கு இதை விட என்ன வேலை..!)

  ......இதற்கிடையில், வனத்துறையால் முட்டுக்கட்டை போடப்பட்டு ஒற்றையடி வழிப்பாதையாக சுருங்கிப்போன வழித்தடத்தை இரு சக்கரம் மற்றும் ஜீப் போன்ற வாகனங்கள் சென்று வரும் அளவிற்கு தாங்களே முன் வந்து இரண்டாயிரமாவது ஆண்டு வாக்கில் தேவாரம் பகுதி வாழ் மக்கள் சாலையை சீரமைத்தனர். ஆனால் அதுவும் சில மாதங்கள் மட்டுமே பயன் பாட்டில் இருந்தது. மீண்டும் வனத்துறை கெடுபிடி செய்து இம்மலைப்பாதை முடக்கப்பட்டு விட்டது.

பின்னர், இரண்டு ஆண்டுகள் கழித்து இப்பகுதி மக்களின் ஓயாத போராட்டம், கோரிக்கையை தொடர்ந்து தமிழக வனத்துறை மதுரை மண்டல வனப்பாதுகாவலர் பாரதி, தேனி டி.எப்.ஓ கணேசன் அடங்கிய அதிகாரிகள் கொண்ட குழுவினர் மலைச்சாலை வழியாக நடந்து சென்று ஆய்வு செய்தனர். அதனையே அரசுக்கு அறிக்கையாகவும் தந்தனர். தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறையும் ரூ.4.5 கோடியில் திட்டம் தயாரித்து அரசிடம் வழங்கியது. அரசும் அனுமதி அளித்தது. சக்கனக்குண்டு வனப்பகுதியில் சாலைபோட வனத்துறையின் அனுமதிக்காக முதன்மை, தலைமை வனப்பாதுகாவலருக்கு நெடுஞ்சாலைத்துறை அனுப்பிய கடிதத்திற்கு பல ஆண்டுகளாக பதில் கிடைக்காமல், மத்திய அரசுக்கு தமிழக அரசு வைக்கும் கோரிக்கையை ஆராய்ந்து அதனை செயல்படுத்தவும், 5 கிலோ மீட்டர் மலைச்சாலை திட்டத்தை நிறைவேற்றவும் இனி எத்தினியாவது தலைமுறை வந்து போராட வேண்டும்...?

மத்திய அரசுக்கு ஒரு சட்டம். மாநில அரசுக்கு ஒரு சட்டமா...?

  பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் சக்தியாக, இந்த தேசத்தின் பொருளாதாரத்திலும் முக்கிய பாங்காற்றக் கூடியதாகவும் விளங்கும் சாக்கலூத்து மெட்டு – கேரளா இனைப்புச்சாலையை அமைக்க இல்லாத வன விலங்குகள், மரங்களை காரணம் காட்டும் மத்திய அரசு, இதே தேவாரம் பொட்டிப்புரம் அருகில் மலையை குடைந்து ஆயிரத்து முன்னூறு கோடியை ஒதுக்கி, பூமிக்கு அடியில் நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தை அமைக்கும்போது, அங்கு வன வனவிலங்குகள், அரிய வகை மரங்கள் உயிர் வாழவில்லையா...? அவைகளுக்கு எவ்விதத்தில், எவ்வாறான பாதுகாப்பை மத்திய அரசின் வன இலாக்கா வழங்கியுள்ளது...? 
  டெல்லியில் குளுகுளு அறையில் உட்கார்ந்துகொண்டும், குழுக்கூட்டங்களை நடத்தியும், சாட்டிலைட் மூலம் வனப்பகுதிகளை பார்த்துக்கொண்டு அறிக்கைகள் தயாரிக்கும் உயர் அதிகாரிகாரிகள் இங்கு வந்து தேவாரத்திலோ, அல்லது பொட்டிப்புரத்திலோ தங்கியிருந்து மேற்குத்தொடர்ச்சி மலையை ஆய்வு செய்வார்களா....?
   முழுக்க முழுக்க வனம் சார்ந்த மாநிலமான கேரளா, தமிழகத்தை இணைக்கும் ஒவ்வொரு இணைப்பு சாலையையும் அதன் எல்கை வரை போட்டு விட்ட பிறகு தமிழத்திற்குமட்டும் என்ன ஓர வஞ்சனை....