பயனர்:A.THANGAVEL/பயிற்சியிடம்

நான் ஒன்னு சொன்னா, கோவப்படமாட்டீங்கல்ல? அந்த காலத்லெ … கோவப்படலாமா? வேண்டாமா?’ங்கிறத கடைசியில வச்சிகிருவோம் . முதல்ல நீ சொல்ல வந்தத சொல்லு. இந்த அரட்டை அரங்கம்’னா என்னங்க ? அரட்டை அரங்கம்’னா. அரட்டை அடிக்கிறது அரட்டை’ அடிக்கறது’ன்ன ? அரட்டைன்ன அதட்டி சொல்லறது. அதட்டின்ன , உங்க ஊர்ல வறட்டி தட்டுவாங்களே அது மாதிரி அடிச்சி சொல்றது. அடிச்சின்னா அடிக்கிறதுயில்லெ.ஆணித்தரமா சொல்லறது. ஆணித்தரமான்ன ? ஏசுவானவரை சிலுவையிலெ வச்சி ஆணியாலே அடிச்சாங்கலெ அது போலவா ? என்னடா இவன் எத சொன்னாலும் தப்பு தப்பா புரிஞ்சிகிறான் தப்ப தப்பா செஞ்சா தப்பே இல்லிங்க. தப்ப ராங்கா செஞ்சாத்தாங்க ……!!! மாமு , நீ சொல்றதுதான் ரொம்ப கரீட்டு. இப்ப எத கரெக்ட்’ங்கிற ? கரெக்டெ கரெக்டா செய்றதையா? இல்லெ கரெக்டெ ராங்கா செய்றதையா ? . ஏண்டி , உன் வீட்டுகாரர் எப்பவுமே இப்படிதானா ? இல்ல இப்படித்தான் எப்பவுமேவா ? வூட்டுகாரர்’ன்னா ? என் புருஷனையா? இல்லெ ஹவுஸ் ஓனரையா ? என் புருஷன்னா எப்பவுமே இப்படித்தான் . ஹவுஸ் ஓனருன்னா இப்படித்தான் எப்பவுமே . எப்படி’டீ இந்த ஆளோட இத்தன வருஷமா குப்ப கொட்ரெ ? குப்பையும் ஒரு நாள் கோபுரமாகும் தெரியுமா !. கோபுரம் பைசா கோபுரம்மாதிரி சாஞ்சிற கூடாதில்லெ. பைசாவுக்கு இப்ப எங்ககங்க மதிப்பு . அந்த காலத்லெ பைசாவுக்கு இருந்த மதிப்பு… நான் ஒன்னு சொன்னா, கோவப்படமாட்டீங்கல்ல ? மறுபடியும் முதல்ல இருந்தா ? (இப்ப கோவப்படுறதபத்தி யோசிக்கலாம் .)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:A.THANGAVEL/பயிற்சியிடம்&oldid=1137201" இலிருந்து மீள்விக்கப்பட்டது