abstract -2 v. பிரித்தெடு, கவர்ந்துகொள், பிண்டத்திற்பிரித்துக்கருது,
abstracted a. பிரித்தெடுக்கப்பட்ட, கவனக்குறைவான, வேறு எண்ணமுடைய.
abstraction n. பிரித்தெடுத்தல், கவனமின்மை, பிண்டமல்லாதபொருள், மனக்கண் தோற்றம், உலப்பொருள்களினின்று விலகி இருத்தல், கவர்ந்துகொள்ளுதல், பிண்டத்திற்பிரித்துக்கருதுதல், கருத்துப்பொருள்,
abstruse a. எளிதில் அறியப்படமாட்டா, மறைபொருளான.
absurdity n. முட்டாள்தனம். நகைப்புக்குரியது, அறிவுக்கு ஒவ்வாமை.
abundant a. நிறைவான, ஏராளமான.
abut v. எல்லையோடு எல்லை ஒட்டியிரு, அண்டைகட்டு.
abutment n. ஒட்டிக்கிடக்கை, முட்டிடம், உதைவு.
abutter n. பக்கத்திலுள்ள சொத்தின் உரிமையாளர்.
acanthus n. முட்செடி வகை. கிரேக்க சிற்பத்தில் மரபாகக்காட்டப்படும் முள்ளிலை வடிவம்.
acatalectic n. அசை குன்றாச் செய்யுள் (பெ) (யாப்) முழு அலகுடைய, அசை குன்றாத.
acatalepsy n. பொருள்களை முழுதும் அறியமாட்டாமை.
acaulescent, acaulous தண்டு இல்லாத, தண்டு குன்றிய.
accelerate v. விரைவுபடுத்து, முடுக்கிவிடு.
accelerated a. விசை ஏறிக்கொண்டு இருக்கிற.
acceleration n. விரைவுபடுத்துதல், வளர்விரைவு, முடுக்கம்.
accelerative a. விரைவுபடுத்தும் இயல்புடைய.
accelerator n. முடுக்குப்பொறி, முடுக்கி விடுபவர் (வேதி) விசை துரப்பி, செயல் விரைவுபடுத்தும் பண்டம் (உட) விசை நரம்பு, விசைத்தசை.
accelerent n. விரைவுபடுத்தும் கருவி.
accent -1 n. அசை அழுத்தம், அசை ஊன்றல். ஒலியெடுப்பு, வற்புறுத்தல், அழுத்தக்குவற, வெவ்வேறு இடத்தவர் அல்லது இனத்தவர் பேசும் வகை, (இசை) இடையிட்ட அலை எழுச்சி, கூரிய வேறுபாடு.
accentuate v. அசையழுத்தப்பட உச்சரி, அசையழுத்தக்குறிஇடு, வலியுறுத்து, சிறப்படையச்செய்.
accept v. ஏற்றுக்கொள், ஒப்புக்கொள், உடன்பாடு, நம்பு, மேற்கொள்ள இணங்கு.
acceptability n. ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மை.
acceptable a. ஏற்றுக்கொள்ளத்தக்க, விரும்பத்தக்க, மகிழ்ச்சி, விளைவிப்பதான.
acceptance n. ஏற்றுக்கொள்ளுதல், ஏற்பு, உடன்பாடு, ஒப்புதல்பட்டி, நம்பிக்கை.
acceptor n. ஒப்பந்தச் சீட்டை ஏற்றுக்கொள்பவர், மாற்று உண்டியலை ஒப்புக்கொள்பவர்.
accessibility n. எளிவரல், காட்சிக்கு எளிமை, எளிதில் அணுகத்தக்க தன்மை,
accetation n. ஏற்புடைப்பொருள், ஒரு சொல்லுக்குப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருள்
accident n. எதிர்பாராத நிகழ்ச்சி, கருதிச் செய்யப்படாத செயல், விபத்து.
accidental a. தற்செயலாய் நிகழ்வதான, அவசியற்ற, இன்றியமையக்கூடிய.
accidentalism n. இயல்புக்கோட்பாடு, காரணமின்றிச் செயல்கள் நிகழ்கின்றன என்னும் கோட்பாடு, (மரு) குறிமுறை, காரணத்தின் அடிப்படையில்லாமல் அறிகுறிகளைத் தழுவியமுறை.
accipitral, acciitrine a. வல்லுறு போன்ற, பெருந்தீனி கொள்ளுகிற, கூரிய பார்யடைய.
accite v. சான்றுகாட்டு, சான்றுக்கு அழை.
acclamation n. பாராட்டுப்பேரொலி, பேதொலியோடு இசைவு தெரிவித்தல்,
acclamatory a. பாராட்டும் தன்மையுள்ள.
acclimatation,acclimation,acclimatisation, acclimatization n. இணைக்கப்பாடு, புதிய தட்பவெப்பநிலைக்கு ஏற்பப் பழக்கப்படுத்திக் கொள்ளுதல், புதிய தட்ப வெப்ப நிலைக்கு ஒப்பப் பழகுதுல், வேற்றிட வயமாதல்.
acclimatise, acclimatize v..இணக்குவி, புதிய தட்ப வெப்ப நிலைக்குப் பழக்கு.
acclivity n. சாய்வான ஏற்றம், மேல் நோக்கிய சரிவு.
accommodate v. இவுபடுத்திக்கொள், இணக்குவி, இடங்கண்டுகொடு, கடன்கொடுத்துதுவு, இணங்கு, உதவிசெய், இணங்கிப்போ.
accommodating a. உதவும் மனப்பான்மை உடைய.
accommodation n. இசைவுபடுத்துதல், இடஉதவி, இடவசதி, குடியிருப்பு, இடம், கடனுதவி.
accommodation bill கடனுதவி உண்டியல்.
accommodation unit, குடியிருப்பிடக்கூறுபாடு.
accommodative a. உதவும் போக்குடைய, ஒத்துப்போகும் இயல்புடைய.
accompaniment n. உடன்போதல், பின்தொடரல், (இசைம) துணைக்கருவி.
accompanist n. பக்கவாத்தியக்காரர்.
accomplishment n. முடித்தல், நிறைவேற்றல், நிரைவேற்றிய செயல், சிறப்புத் திறமை,சமூக வாழ்வில் ஒருவர்க்கு நிறைவுதரும் சீர், வித்தகம்.
accordant a. பொருந்துகிற.
according to பின்பற்றி, பொருந்துமாறு, முன்னிட்டு, எடுத்துச் சொல்கிறபடி
accost n. திறப்புச்சொல், கைகூப்புரை, வணக்கமொழி, அழைப்பு, (வினை) அணுகி அழை, முதலில் பேசு, கைதட்டி அழை, கைகாட்டிக் கூப்பிடு.
accumulation n. திரட்டுதல், குவித்தல், திரளுதல், குவிதல், குவியல், திரட்சி, தொகுதி, குவிந்துகிடத்தல்.
accumulative a. குவிகிற,குவிக்கிற, சிறுகச்சிறுகச் சேருகிற, திரண்டுருவான.
accumulator n. குவிப்பவர், திரட்டுபவர், பணம் பெருக்குபவர், அடுக்கடுக்கான பட்டங்களை ஒருசேர எடுப்பவர், மின் சேமகலம், மின்னாற்றலைத் தொகுத்து வைத்தற்குரிய கருவி.
accurate a. திட்பநுட்பமான, குறிதவறாத உண்மைக்தொத்த, அளவுக்கியைந்த, வழுவாத, திருத்தமான, செம்மையான.
accusal, accusation n. குற்றச்சாட்டு, குற்றப்பத்திரம் படித்தல்.
accusative n. இரண்டாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமைச்சொல், (வினை) இரண்டாம் வேற்றுமைக்குரிய, குற்றம் சாட்டுகிற,
accusatorial a. குற்றம் சாட்டும் முறையை ஒட்டிய.
accusatory a. குற்றச்சாட்டடங்கிய.
accustom v. பழக்கமாக்கு, பயிற்று.
accustom oneself to. பழகிக்கொள்.
accustomary a. பழக்கமான இயல்புடைய.
acerbate v. கைம்புளிப்பாக்கு, கடும்புளிப்பாக்கு, எரிச்சல் உண்டாக்கு.
acerbity n. கசப்பான புளிப்பு, கடுஞ்சுவை, கடுகடுப்பு, சிடுசிடுப்பு.
acervate a. குவிந்த, கொத்தாக வளருகிற.
acescent a. புளித்த, உறையூட்டப்பெற்ற.
acetabulum n. தொடையெலும்பின் பந்துக்கிண்ண மூட்டு பொருந்துகிற குழிவு.
acetal n. உயிரகம் ஊட்டப்பட்ட வெறியநீர்.
acetic a. புளிங்காடி சார்ந்த.
acetic acid. புளிங்காடி.
acetify v. புளிங்காடியாக மாற்று, புளிங்காடியாக மாறு, புளிப்பாக்கு,.
acetone n. உயிரியக்கச் சேர்மங்களுடன் கலந்து கரைசலாகும் இயல்புடைய நிறமற்ற படிக நீர்மம்.
acetose a. புளிங்காடி போன்ற, புளிப்பான.
acetylene n. ஒள்வளி, சுண்ணக்கரியகையும் நீரும் சேர்தலால் உண்டாகும் ஒளியுடை வளி.
acharnement n. ஆவேசம், எழுச்சியார்வம்.
achievement n. செயல்வெற்றிகாணல், செய்துமுடித்தல், சாதனை, வெற்றிக்கேடயம்.
acidimeter n. காடிமானி, காடிப் பொருள்களின் ஆற்றலை அளக்கும் கருவி.
acidity n. காடித்தன்மை, காடித் தன்மையளவு, புளிப்பு.
acidulated a. இளம் புளிப்பாக்கப்பட்ட.
acierate v. எஃகாக்கு.
Acknowledgement பெறுகை ஒப்பம், ஒப்புரை
acknowledgement, acknowledgment n. ஏற்றுக் கோடல், ஒப்புக்கொள்ளுதல், நன்றி, ரசீது.
acolyte n. திருக்கோயில் ஏவலர்.
aconite n. நச்சுச் செடிவகை, நஞ்சு.
acotyledon n. விதைப் பருப்பற்ற பூவாச்செடி.
acoustic, acoustical a. ஓசைப் புலணைச் சார்ந்த.
acoustics n. ஓசை ஆய்வியல் துறை, செவிப்புலன் இயைபு.
acquaint v. தெரிவி, பழக்கப்படுத்து, அறிமுகமாக்கு.
acquaintance n. அறிமுகம், பரிச்சயம், அறிமுகமானவர்.
acquest n. அடையப்பட்ட பொருள், (சட்) தாயப்பொருள் அல்லாத ஈட்டம்.
acquiescent n. தங்குதடையின்றி இணங்குபவர், (வினை) எதிர்ப்பேச்சின்றி இசையும் இயல்புடைய.
acquirementn தேட்டம், முயன்று பெறப்பட்ட பொருள், பண்புப்பேறு, கைப்பற்றுதல்.
Acquisition கைப்படுத்துகை, கையகப்படுத்தல்
acquisition n. ஈட்டப்பட்ட பொருள், கைப்பற்றப்பட்ட பொருள், கைப்பற்றுதல்.
acquisitive a. கைப்பற்றும் ஆர்வமுடைய, பிறர் பொருளை வெஃகுகின்ற.
acquit v. விடுவி, கடனாற்று, நிறைவேற்று, குற்றமின்மை அறிவி.
acquittal n. குற்றவிடுதலை, கடன்விடுதலை.
acquittance n. கடன் தீர்த்தல், பெறுகைச்சீட்டு, ரசீது,
acretive a. புறவொட்டான, கூடுதலாகும் இயல்புடைய.
Acrita n. தெளிவான நரம்பு அமைப்பற்ற விலங்கினம்.
acroamatic, acroamatical a. வாய் மொழியான, எழுத்தில்வராத, மறையுரையான.
acrobat n. கழைக்கூத்தாடி, வேழம்பர், அரசியல் செப்பிடு வித்தையாளர்.
acrobatic a. கழைக் கூத்தாடிக்குரிய, குட்டிக்கரணம் இடுகிற.
acrobatics n. செப்பிடு வித்தை, களரி விளையாட்டுகள்.
acrobatism n. சிலம்பக் கலை, கழைக்கூத்தாடி வித்தை.
acrolith n. கற்பூண் இட்ட சிலை, தலைகைகால்கள் மட்டும் கல்லாலான கலையுருவம்.
acropetal a. முகடு நோக்கிய.
acrostic n. கரந்துறை பாட்டு, வரிகளின் முதலெழுத்தை அல்லது கடையெழுத்க கூட்டுதலால் சொல்லுண்டாகும் பாட்டுவகை அல்லது புதிர்வகை.
acrotism n. நாடித் துடிப்பின்மை.
act n. செயல், வினை, நாடகக் காட்சி, வேடிக்கைக்காட்சி, காட்சிப்பகுதி, அங்கம், சட்டம், சிறு பிரார்த்தனை, (வினை) செய், செயல்புரி, நடி, விளைவு உண்டாக்கு, பதிலாக வேலைசெய், மாற்றாள் வேலைபார்.
act of God. தெய்வச்செயல், மனித ஆற்றல் கடந்த எதிர்பாரா இயற்கை நிகழ்ச்சி.
act on. செல்வாக்குக்கொள், செயல்விளைவு உண்டுபண்ணு, இணங்க நட.
act up to. கொள்கைக்கு ஏற்பச்செயற்படு, நிறைவேற்று.
acting n. செய்தல், நடிப்புக்கலை, பாசாங்கு செய்தல், மாற்றாள் வேலைபார்த்தல், (வினை) மாற்றாள் வேலைபார்க்கிற, த்றபொழுதைக்குப் பணியாற்றுகிற.
Actinia n. கடற்பஞ்சு இனம்.
actinic a. வேதியியல் விளைவுதரும் ஒளிக்கதிர்களை ஒட்டிய.
actinism n. ஒளிக்கதிரினால் ஏற்படும் வேதயியல் விளைவு.
actinium n. கதிரியக்கமுடைய உலோகப் பொருள்களில்ஒன்று, அணு எண் க்ஷ்ஹீ கொண்ட தனிப்பொருள்,
actinometer n. ஒளிக்கதிர் வேதியியல் விளைவுமானி, ஞாயிற்றுக் கதிரின் நேர்வெப்ப மானி, ஒளி-வெப்பமானி.
actinotherapy n. ஒளிமருத்துவமுறை, ஒளிக்கதிர் பாய்ச்சி நோய் தீர்க்கும் முறை.
action n. செயல், செயற்படுமுறை, வினையாற் றுதல், நடவடிக்கை, போர்வினை, வழக்குநடவடிக்கை, நாடகம் புதினம் முதலியவற்றின் நிகழ்ச்சிப்போக்கு.
action committee, action group. நேரடி நடவடிக்கைக்குழு, கட்சி சாராதவர்களைக் கூட்டுறவுகளிலிருந்து ஒழிப்பதற்கான செயற்குழு.
action station. போரில் ஈடுபடுவதற்கு முன் படைத்துறையினர் மேற்கொள்ளும் வாய்ப்பான இடம்.
actionable a. வழக்குக்கு இடங்கொடுக்கிற, வழக்காடத்தக்க.
activate v. சுறுசுறுப்பாக்கு, செயற்படுத்து, தூண்டு, கதிரியக்கம் உண்டுபண்ணு.
activation n. செயற்படுத்துதல், தூண்டுதல்.
active a. செயற்படுத்துகிற, சுறுசுறுப்பான,செயல் திறமுடைய (இலக்)செய்வினை வடிவான.
activism n. மனத்திட்பமே வினைத்திட்டம் என்னும் ரூடால்ப் யூகன் என்ற மெய்ஞ்ஞானியின் கோட்பாடு, விறுவிறுப்பாகச் செயலாற்றும் முறை.
activist n. வினைத்திட்பக் கோட்பாடு உடையவர், விறுவிறுப்பாக்ச செயலாற்றுபவர், தமது உற்பத்தியளவினை அல்லது தம் குழுவின் உற்பத்தியளவினைப் பெருக்கி வெற்றி காணும் பொதுவுடைமைக் கட்சி உழைப்பாளர்.
activity n. சுறுசுறுப்பாயிருத்தல், செயல், நடவடிக்கை.
acton n. கவச உள்ளுறை, போர்க்கவசத்திற்கு உள்ளே அணியப்படும் பஞ்சூட்டிய சட்டை.
actor n. நடிகன்.
actress n. நடிகை.
actual a. உண்மையாக உள்ள, உண்மையான, நடைமுறையில் உள்ள.
actualise v. எய்தப்பெறு, மெய்யாக்கு, மெய்யெனத் தோற்றும்படி விரித்துக்கூறு.
actualist n. செயலிலே குறியாயிருப்பவர்.
actualities n. நடப்பு நிலைகள்.
actuality n. மெய்ம்மை, நடந்துவிட்ட நிகழ்ச்சி, மெய்ந்நடப்பு.
actuary n. காப்பீட்டுக் கணிப்பாளர், பதிவாளர், பத்திரச்சான்றாளர்.