பரிந்துள்ளல்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல் 1243 என்ற குரளில் வரும் இச்சொல் கண்ணோட்டம் என்ற சொல்லுக்கு மாற்று சொல்லாகும். கண்னோட்டம் என்ற சொல்லுக்கு அருள் அளித்தல் அல்லது பழகியவரிடத்து மறுத்தல் சொல்ல இயலாமை என்னும் பொருள் வழங்கிவருகிறது. இது தவறாகும்.கண்ணோட்டம் என்றால் ஒருவரை அவர் எவ்வாறு அறிந்துள்ளாரோ அவ்வாறே அறிவது. அவருடைய எண்ண உலகத்துக்குள்ளும் உணர்ச்சி உலகத்திற்குள்லும் சென்று அவருடைய உலகத்தை நம்முடைய இடுபொருள்கள் எதுவுமின்றி புரிந்து கொள்வது. உள்வியல் சொல்லான empathy என்ற சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லாகும் கண்ணோட்டம்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரிந்துள்ளல்&oldid=1070221" இலிருந்து மீள்விக்கப்பட்டது