கடலின் அடியில் பவழப்பூச்சிகள்
பவழமும் இணைந்த ஒரு தலைப்பாகை ஆபரணம்...செந்நிற மணிகள் பவழங்களாகும்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பவழமாலை, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. பவழ மணிகளாலான பெண்கள் கழுத்தில் அணியும் மாலை.


மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. a garland made of coral beads worn by women around neck.

விளக்கம் தொகு

தமிழக கலாச்சாரத்தில் முத்தும் பவழமும் இணைபிரியாதவை...இவைகளினால் தயாரிக்கப்பட்ட மாலைகளை (ஆரங்கள்) பெரிதும் விரும்பி அணிவர்..நவரத்தினம் என குறிப்பிடப்படும் ஒன்பது ஆபரணங்களுக்கான மணிகளில் இவையும் அடக்கம்...பவழம் கடலில் பவழப்பூச்சிகளின் பாறைகளை வெட்டி எடுக்கப்படுகிறது...சிவந்த நிறமுள்ளது...பவழம் சேகரிப்பவர்கள் படகில் சென்று கடலின் அடித்தளத்தில் வலையை வீசி வலையை இழுக்கும் போது கிடைக்கும் பவளத் தொகுப்புயிர்களின் (பாறைகள்) உடைந்த துண்டுகளைச் சுத்தப்படுத்தி தேவைப்பட்ட 'அளவு மற்றும் வடிவமைப்பில்' வெட்டி இழைத்து மழமழப்பாக்கி ஆபரணங்களுக்குப் பயன்படுத்த விற்பர்...மாலைகளுக்கான பவழங்களை சுண்டுவிரல் பருமன் உள்ளதாய், சிறுசிறுத் துண்டுகளாகச் செய்து உண்டாக்குவர்...இந்த பவழத் துண்டுகளால் (மணிகளால்) ஆன மாலையே பவழமாலை எனப்படும்... பவழப்பாறைகள் கடலில் வேகமாக அழிந்து வருகின்றன...பவளம் என்று சொல்லப்படுவதும் இதுவே...தற்போது பவழங்களை அதிக அளவில் தயாரிப்பதில்லை...அசலான பவழங்கள் கிடைப்பதில்லை...அவைகளைப் போலவே இருக்கும் மாற்றுப்பவழம் வந்துவிட்டது...



( மொழிகள் )

சான்றுகள் ---பவழமாலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி ̣̣̣

"https://ta.wiktionary.org/w/index.php?title=பவழமாலை&oldid=1216522" இலிருந்து மீள்விக்கப்பட்டது